• Jun 04 2023

என்னுடைய தங்கப் பேனாவை பரிசளிக்கப் போகின்றேன்- நெகிழ்ந்து பாராட்டிய வைரமுத்து- அதுவும் யாருக்கு தெரியுமா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


நேற்று 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் திண்டுக்கல்லை சேர்ந்த நந்தினி என்ற மாணவி 600க்கு 600 மார்க்குகள் பெற்று சாதனை படைத்து இருக்கிறார்.அவருக்கு ஏராளமான பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். மேலும் இன்று அவர் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று இருக்கிறார்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து நந்தினிக்கு ஒரு தங்க பேனாவை பரிசாக தருவதாக அறிவித்து இருக்கிறார்."அண்மையில் நான்பெற்ற தங்கப் பேனாவைத் தங்கை நந்தினிக்குப் பரிசளிக்கிறேன். திண்டுக்கல் வருகிறேன்; நேரில் தருகிறேன்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். 

ஒரு

தச்சுத் தொழிலாளியின் மகள்

மாநிலத் தேர்வில்

உச்சம் தொட்டிருப்பது

பெண்குலத்தின் பெருமை

சொல்கிறது

எப்படிப் பாராட்டுவது?

அண்மையில் நான்பெற்ற

தங்கப் பேனாவைத்

தங்கை நந்தினிக்குப்

பரிசளிக்கிறேன்

திண்டுக்கல் வருகிறேன்;

நேரில் தருகிறேன்

உன் கனவு

மெய்ப்படவேண்டும் பெண்ணே! என வாழ்த்துத் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement