• Sep 26 2023

நானும் ஒரிஜினல் சென்னை பையன் தானுங்க- மனம் திறந்து பேசிய Dulquer Salmaan

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ், மலையாளம்,`ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகர் தான் துல்கர் சல்மான்.இவரது நடிப்பில் வெளியாகிய சீதாராமம், சுப், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இதனை அடுத்து கிங் ஆஃப் கோதா என்ற படத்தில் நடித்துள்ளார். இவருடன் சேர்ந்து இப்படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரித்திகா சிங், அனிகா சுரேந்தர் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்தத் திரைப்படம் ஓணம் பண்டிகையையொட்டி 24ம் தேதி வெளியாகவுள்ளது.


இதனால் இப்படத்தின் ப்ரமோஷன் பணியில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் படத்தின் பிரமோஷனில் துல்கர் சல்மான் கலந்துக் கொண்டார்.

அப்போது ரஜினியின் ஜெயிலர் படத்தை பாராட்டிய துல்கர், ரஜினிக்கு ரசிகர்கள் அதிகமாக உள்ளதாகவும் ஜெயிலரின் 1 சதவிகித ரசிகர்களை கவர்ந்தாலும் கிங் ஆஃப் கோதா மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கூறியுள்ளார். இதனிடையே தானும் ஒரிஜினல் சென்னை பையன்தான் என்று கூறியுள்ளார்.


சென்னையில்தான் தான் தன்னுடைய பள்ளிப்படிப்பை மேற்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும் தான் வழக்கமாக சென்னையின் சத்யம் சினிமாஸ் மற்றும் எஸ்கேப் திரையரங்குகளில் படங்களை பார்ப்பேன் தான் சூர்யாவின் மிகப்பெரிய ரசிகன் என்பதையும் ரசிகர்களிடையே பகிர்ந்துக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement