• Sep 27 2023

இரண்டாவது கல்யாணம் பண்ண பயமா இருக்கு- கண்ணீர் மல்க கூறிய காமெடி நடிகை

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து பிரபல்யமானவர்கள் பலர் இருக்கின்றார்கள்.அவர்கள் வரிசையில் முக்கியமானவர் தான் பிரேம பிரியா.வடிவேலுவுடன் சில படங்களில் இணைந்து நடித்து வந்த இவருக்கு சில வருடங்களாகவே சோகமான செய்தி நடந்துள்ளது. அதாவது இவருடைய அக்கா, அப்பா, மாமனார், கணவர் என எல்லோரும் இறந்துவிட்டாக கூறப்படுகின்றது.

இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், கணவர் இறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.  அதாவது எல்லோரும் இரண்டாவது திருமணம் செய்துகொள் என்று சொல்லுறாங்க, ஆனால் என்னுடைய மகள் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.


 எனக்கு பயமாக இருக்கிறது. அதனால் வேண்டாம் என்று கூறிவிட்டேன். அக்கா, அப்பா, மாமனார் எல்லாம் வரிசையாக உயிரிழந்தபோது, கணவர் மட்டும் தான் துணை என்று நினைத்தேன்.அடுத்த 2 மாதங்களில் அவரும் இறந்துவிட்டார். அப்போது மிகவும் கஷ்டப்பட்டேன். இப்போது தான் ஒரு சில படங்களிலும், சீரியல்களிலும் வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அத்தோடு, எனக்கு இருப்பது பெண் பிள்ளை.

கல்லூரி படிக்கும் அவருக்கு படித்து முடித்தவுடன் திருமணம் செய்துவைக்க வேண்டும். நான் இந்த நேரத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், என் மகளின் வாழ்க்கை பாதிப்படும் என்று பயமாக இருக்கிறது.


அதனால் தான் நான் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள வேண்டாம் என முடிவெடுத்துவிட்டேன். மேலும் அந்த நபர் என் மகளை பத்திரமாக பார்த்துக்கொள்வாரா என்று சந்தேகமாக உள்ளது என்றும் நடிகை பிரேம பிரியா அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement