• Apr 25 2024

லியோ படம் எப்படி இருக்கும்..? சூப்பரா பதில் கொடுத்த கைதி அன்பு..என்ன சொல்லியிருக்காரு பாருங்க!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி வருகிறார். அதிரடி ஆக்சன் கலந்த கேங்ஸ்டர் படமாக உருவாகி வரும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார்.

 இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தற்போது காஷ்மீர் பகுதியில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தில் ப்ரியா ஆனந்த், அர்ஜுன் சர்ஜா, சஞ்சய் தத் மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இதற்கிடையில், லியோ திரைப்படம் எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல நடிகரான அர்ஜுன் தாஸ் சமீபத்தில் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசியுள்ளார். 

லியோ படம் குறித்து பேசிய அர்ஜுன் தாஸ் ” லியோ படம் கண்டிப்பாக லோகேஷ் கனகராஜின் சம்பவமாக இருக்கும்” என கூறியுள்ளார்.

அவர் பேசிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில், இதனை பார்த்த பலரும் அப்போ அர்ஜுன் தாஸும் படத்தில் இருக்கிறார். லியோ படம் கண்டிப்பாக lcu தான் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள். 

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி ஆயுத பூஜை அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement