• Apr 19 2024

உங்களுக்குள்ள ரொமான்ஸ் எப்படி இருந்திச்சு…அதர்வா சொன்ன அந்தப் பதில்…கலாய்க்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று வளர்ந்து வரும் நட்சத்திரங்களில் ஒருவராக முன்னேறி வருபவரே நடிகர் அதர்வா. தந்தையை மிஞ்சிய தனயன் என்ற பாராட்டை பெறுமளவிற்கு தனது விடா முயற்சியையும், கடின உழைப்பினையும் நடிப்புத் துறையில் காட்டி வருகின்றார். இந்த நிலையில் இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள படமே 'குருதி ஆட்டம்'.

'8 தோட்டாக்கள்' என்ற திரைப்படத்தை இயக்கிய ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் உருவான இப்படமானது ஆகஸ்ட் 5-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியானது. அதர்வா மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் வெளியாகியுள்ள இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

மேலும் இப்படத்தினை ராக்போர்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அத்தோடு ராதாரவி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்தப் படமானது தற்போது திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கின்றது. அதர்வா ரசிகர்கள் பலரும் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் படம் வெளியாவதற்கு முன்னர் இப்படம் தொடர்பாக ஒரு பேட்டியில் அதர்வா கூறிய விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது. அதாவது அந்தப் பேட்டியில் அதர்வா டைட்டிலே வேற மாதிரி அட்டகாசமாக இருக்கு எனக் கூறியிருக்கார்.

தொடர்ந்து படம் பற்றி அதர்வா பேசுகையில் "இந்தப் படம் ரிலீஸ் ஆகிறது ரொம்ப சந்தோசமாக இருக்கு எனக் கூறியிருக்காரு. அதுமட்டுமல்லாது நடிகை ராதிகாவோடு இணைந்து நடித்த அனுபவம் எப்படி இருக்கு என்று கேட்டதற்கு "ராதிகா மாம் சீனியரு, அவங்களோட இணைந்து நடித்தது ரொம்பப் பெருமையாக இருக்கிறது" என மகிழ்ச்சி கலந்த தொனியில் பேசினார் அதர்வா.

அதனைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் பற்றிப் பேசுகையில் பிரியா ஸ்கூல் ரீச்சர் கரெக்டரில் நடிச்சிருக்காங்க எனக் கூறியிருக்கார். எனினும் அந்நேர்காணலில் அடுத்த கேள்வியாக "பிரியாவிற்கும் உங்களுக்கும் ரொமான்ஸ் எப்படி இருந்திச்சு?" எனக் கேட்டிருக்காரு. அதற்கு அதர்வா கொஞ்சமும் தயக்கமின்றி "எங்களுக்கு நல்லா இருந்திச்சு, நீங்க தான் பார்த்து சொல்லணும் என சிரிச்சுக்கிட்டே கூறியிருக்காரு.

அதர்வா சொன்ன பதிலைக் கேட்ட ரசிகர்கள் பலரும் கமெண்டுகளினால் அவரைக் கிண்டல் செய்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement