• Apr 24 2024

ஸ்ரேயா,பிரகாஷ்ராஜ்,ஸ்ரீகாந்த் என பலரும் நடித்த ''மியூசிக் ஸ்கூல்'' படம் எப்படி இருக்கு? - திரைவிமர்சனம் இதோ!

Jo / 11 months ago

Advertisement

Listen News!

பள்ளியில் இசை ஆசிரியராக பணியில் சேர்கிறார் ஸ்ரேயா. பள்ளி நிர்வாகம் மாணவ, மாணவிகளை இசை, விளையாட்டுகளில் ஈடுபட விடாமல் அதிக மதிப்பெண் எடுக்க படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த நிர்ப்பந்திக்கிறது. அதோடு பள்ளியின் வரவு, செலவுகளை பார்க்கும்படி ஸ்ரேயாவுக்கு வேலை கொடுக்கின்றனர்.

இதனால் விரக்தில் இருக்கும் ஸ்ரேயாவுக்கு நாடக ஆசிரியர் பள்ளிக்கு வெளியே மாணவர்களுக்கு தனியாக இசை கற்றுக்கொடுக்க ஆலோசனை சொல்கிறார். அதை ஏற்று வீட்டின் அருகிலேயே ஒரு இடத்தில் இசை பள்ளியை தொடங்குகிறார் ஸ்ரேயா.

அங்கு பயில வரும் மாணவ, மாணவிகளுக்கு இசையுடன் நாடக பயிற்சியும் அளிக்கின்றனர். ஒரு நாடகத்தை அரங்கேற்றம் செய்யவும் முயற்சிக்கின்றனர். அதற்கு பல இடையூறுகள் வருகிறது. அதை மீறி அரங்கேற்றம் நடந்ததா? என்பது கிளைமாக்ஸ்.ஸ்ரேயா இசை ஆசிரியை கதாபாத்திரத்தில் கலகலப்பாக வந்து அனுபவ நடிப்பை வழங்கி இருக்கிறார். ஷர்மான் ஜோஷி அமைதியான நடிப்பால் கவர்கிறார். பிரகாஷ்ராஜ் போலீஸ் உயர் அதிகாரியாக மிடுக்கு காட்டுகிறார். லீலா சாம்சன், வினய் வர்மா, ஸ்ரீகாந்த், மங்கள் பட் பெஞ்சமின் ஆகியோரும் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிப்பை கொடுத்துள்ளனர்.

சிறுவர், சிறுமிகள் அடிக்கும் லூட்டிகள் ரசிக்க வைக்கின்றன.திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

இளையராஜாவின் பின்னணி இசை பலம். நிறைய பாடல்கள் உள்ளன. அவை கதையோடு பயணிப்பது நிறைவு. கிரண் டிஹோஹன்ஸ்ஸின் கேமரா கோவா அழகை ரம்மியமாக படம் பிடித்து உள்ளது.

குழந்தைகளை படிப்பு, மதிப்பெண் என்று பிழியாமல் கலைகளிலும் ஈடுபடுத்தி திறமைகளை வெளியே கொண்டுவர வேண்டும் என்ற சமூக அக்கறையோடு படத்தை எடுத்து இருக்கிறார் இயக்குனர் பாப்பா ராவ் பிய்யாலா. பெற்றோருக்கான பாடமாக படம் இருப்பது சிறப்பு.





Advertisement

Advertisement

Advertisement