• Mar 29 2024

பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், ஆதித்த கரிகாலன் ஆனது எப்படி?- வைரலாகும் வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவின் கனவு திரைப்படமாக இருந்தது பொன்னியின் செல்வன். எம்.ஜி.ஆர் முதல் கமல்ஹாசன் வரை பல்வேறு ஜாம்பவான்கள் எடுக்க முயன்றும் கைகூடாமல் போன இந்த படத்தை பல ஆண்டுகள் முயற்சிக்கு பின்னர் வெற்றிகரமாக எடுத்துக் காட்டி உள்ளார் மணிரத்னம். இப்படத்தை அவர் இரண்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதில் முதல் பாகம் கடந்தாண்டு ரிலீஸ் ஆகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக் குவித்தது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆன இப்படம் உலகளவில் ரூ.500 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 28-ந் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 

இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன.இந்த நிலையில் இப்படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடித்த விக்ரமின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை விக்ரம் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 



Advertisement

Advertisement

Advertisement