• Apr 20 2024

வாரிசு படத்தை எப்படி சொல்லலாம்... டென்ஷனான வம்ஷி பைடிப்பள்ளி

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

 விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் அதிக எதிர்பார்ப்புகளுடன் கடந்த 11ம் தேதி  பிரமாண்டமாக ரிலீஸானது.விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள்  இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.வம்ஷி பைடிப்பள்ளி இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்ததுடன், சீரியல் மாதிரி இருப்பதாகவும் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்.மேலும் இந்த விமர்சனங்கள் பற்றி அதிருப்தியுடன் பேசிய வம்ஷி பைடிப்பள்ளியை ப்ளு சட்டை மாறன் உட்பட நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

எனினும் இதுவரை தமிழ் இயக்குநர்களுடன் மட்டுமே கூட்டணி வைத்து வந்த விஜய், முதன்முறையாக வாரிசு படத்தில் டோலிவுட் இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்தார். தில் ராஜூ தயாரிப்பில் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள வாரிசு, கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். முதன்முறையாக இணைந்த விஜய் - வம்ஷி கூட்டணி கமர்சியலாக சக்சஸ் கொடுத்துள்ளது.

வாரிசு திரைப்படம் முதல் வாரத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரம் இந்தப் படம் மெஹா சீரியல் மாதிரி இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் பிரபல பத்திரிகையின் யூடியூப் தளத்துக்கு பேட்டியளித்துள்ள இயக்குநர் வம்ஷி பைடிப்பள்ளி, இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில் கொஞ்சம் நிதானம் இல்லாமல் டென்ஷனாக பேசும் வம்ஷி, "சினிமா எடுப்பது ஒன்றும் அவ்வளவு ஈஸியானது இல்லை. அது ரொம்பவே கஷ்டமானது, அதன்பின்னால் எத்தனை பேர் வேலை பார்க்கிறோம் என தெரியுமா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பேசியுள்ள அவர், "திரையுலகில் விஜய் மிகப் பெரிய ஸ்டார், நான் கமர்சியல் படம் தான் எடுக்கிறேன், அது ரசிகர்களை எண்டர்டெயின் பண்ணுதா இல்லையான்னு மட்டும் பாருங்க. அதுவிட்டுட்டு சீரியல் மாதிரி இருக்குதுன்னு எப்படி சொல்லலாம். சீரியலையும் ஏன் கொச்சைப்படுத்த வேண்டும். அத்தோடு அதுவும் மக்களை ரசிக்க வைக்கும் ஒரு தளம் தான். நான் எனது சாஃப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தேன். இப்போது நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என எனக்குத் தெரியும். ஒரு திரைப்படம் எடுப்பதை அவ்வளவு எளிதாக நினைக்க வேண்டாம்" என பேசியிருந்தார்.

மேலும் வம்ஷியின் இந்த பேட்டியை ப்ளு சட்டை மாறன் கடுமையாக விமர்சித்துள்ளார். எனினும் இதுகுறித்து அவர் போட்டுள்ள ட்வீட்டில், "உண்மைய சொன்னா பயங்கரமா கொந்தளிக்கராறே? நாட்ல நீங்க மட்டும்தான் உழைக்கறீங்களா? மத்தவங்களுக்கு காசு சும்மா வருதா? போதாக்குறைக்கு தியாகம் வேற பண்றாங்களாம். சீரியல் மாதிரி இருக்குன்னு சொன்னது ஒரு குத்தமா?" எனக் கேட்டுள்ளார். அதேபோல் நெட்டிசன்கள் பலரும் வம்ஷியை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதேபோல் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத் இருவரும் ரசிகர்களுக்கு மதிப்பளித்து பேசிய வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். துணிவு ப்ரோமோஷன் இண்டர்வீயூவில் பேசிய ஹெச் வினோத், படம் இயக்குவது கஷ்டமாக இருந்தாலும் அதற்கான சம்பளம் கிடைக்கிறது. அத்தோடு மற்ற துறையில் இருப்பவர்களுக்கும் இப்படியான கஷ்டங்கள் இருக்கதான் செய்யும். சினிமால எல்லாமே நமக்கு கிடைக்குது என பேசியிருந்தார்.எனினும்  அதேபோல், விக்ரம் படம் பற்றி பேசியிருந்த லோகேஷ், நாம என்னதான் பயங்கரமா கஷ்டப்படுறோம்ன்னு சொன்னாலும் கடைசிலா நாங்க கோடிகள்ல சம்பளம் வாங்குறோம். ஆனா, 2000 ரூபாய் சம்பாதிக்குற ஒரு ரசிகர்கள் நம்ம படத்துக்காக 200 ரூபாய் செலவு பண்ணும் போது அந்த உழைப்புக்கு இன்னும் மரியாதை இருக்குதே என கூறியிருந்தார். இந்த வீடியோக்கள் வம்ஷிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement