• Mar 29 2024

எவடி அவ என் புள்ளைய பத்தி அப்படி பேசுறவ- தங்கையின் பிள்ளையை விமர்சித்ததால் பொங்கி எழுந்த அர்ச்சனா

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் சன் டி.வி, ஜீ தமிழ், விஜய் டிவி என முன்னணி தமிழ் சேனல்களில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபல்யமானவர் தான் அர்ச்சனா, இது தவிர விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோவான பிக்பாஸ் சீசன் 4 இலும் கலந்து கொண்டு ரசிகர்களின் பேராதரவைப் பெற்றார்.

தொடர்ந்து சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற டாக்டர் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் அர்ச்சனாவின் மகள் சாராவும் அவருக்கு மகளாகவே டாக்டர் படத்தில் நடித்திருந்தார்.தற்பொழுது ஷு தமிழில் ஒளிபரப்பாகும் சூப்பர் மஃம் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.


அர்ச்சனாவின் தங்கையும் பிரபல யூடியூப் பிரபலமான அனிதா சந்தோக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "உங்கள் பையன் கொஞ்சம் கருப்பா இருக்கான். அவங்க அப்பா போல.. உன் கலர்ல இருக்கனும்ல?.. ஏன் ஒல்லியா இருக்கான்? என கேள்வி கேட்பவர்களுக்கு எனது பதில், "குழந்தைகள் எப்படி இருக்கிறார்களோ அப்படி இருப்பதே சரியானது.

 தயவு செய்து அவர்கள் தோற்றம் மற்றும் அவர்கள் இருக்கும் விதத்தை வைத்து அவர்களை மதிப்பிடாதீர்கள். நீங்கள் நிச்சயமாக பெற்றோரை காயப்படுத்துகிறீர்கள் (நீங்கள் விரும்பாவிட்டாலும் கூட). எந்த தாயும்/தந்தையும் தங்கள் குழந்தைகளைப் பற்றி எதிர்மறையாகவோ அல்லது கெட்டவையாகவோ எதையும் கேட்க விரும்ப மாட்டார்கள்.

நாம் அவசர அவசரமாக சில விஷயங்களைச் சொல்கிறோம், ஆனால் அது பெற்றோருக்கு ஒரு பெரிய நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அன்பாக இருங்கள்" என அனிதா பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவில் பின்னூட்டம் செய்துள்ள அர்ச்சனா, "எவடி அவ என் புள்ளைய பத்தி அப்படி பேசுறவ? பின்னிடுவேன்னு சொல்லி வை!!" என கமெண்ட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement