தனது 35வது பிறந்தநாளை செம கூலாக கொண்டாடும் விஜய்டிவியின் தொகுப்பாளினி

854

தமிழ்த் தொலைக்காட்சிகளில் முக்கியமான தொலைக்காட்சிகளாக மக்களால் அதிகம் விரும்பிப்பார்க்கப்படும் தொலைக்காட்சியாக விஜய்டிவி, சன்டிவி என்பன முக்கிய இடம் வகிக்கின்றன. இதற்குக் காரணம் இதில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் ரியாலிட்ரி ஷோக்கள் என்பனவே ஆகும்.

மேலும் இத் தொலைக்காட்சிகளில் சிறப்பாக நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் பல முன்னணி தொகுப்பாளர்கள் காணப்படுகின்றனர். இவர்களில் மா கா பா ஆனந்த், ப்ரியங்கா, டிடி ,அர்ச்சனா, தீபக் ,ரம்யா ,கீகீ போன்றோரைக் கூறலாம். அத்தோடு இவர்கள் தொகுத்து வழங்கிய அனைத்து நிகழ்ச்சிகளுமே செம ஹிட்டானவை.

அந்த வகையில் ஜோடி நம்பர் ஒன், உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கி புகழ்பெற்ற தொகுப்பாளினியாக வலம் வருபவர் தொகுப்பாளினி ரம்யா.இவர் இதுமட்டுமல்லாது “ஓகே கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, வனமகன்” ஆகிய படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா தற்போது கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மேலும் 2014ம் ஆண்டு அப்ரஜீத் என்பவரை திருமணம் செய்துகொண்ட ரம்யா பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பிய ரம்யா அடுத்தடுத்து படங்களில் நடிப்பது நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது என படு பிஸியாக வலம் வருகிறார்.

அத்தோடு சொந்த வாழ்க்கை சோகத்தில் முடிந்தாலும் அதை எண்ணி வருத்தப்படாமல் சினிமாத்துறையில் தான் கனவு கண்ட இடத்தை அடைந்து வரும் ரம்யா இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றமையும் முக்கியமாகும்.