• Apr 19 2024

நம்பிக்கை இல்லாத வடிவேலு... கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

Aishu / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலக  நகைச்சுவையில் வடிவேலு தவிர்க்க முடியாதவர். அவரது ஒவ்வொரு அசைவும் அடுத்தவர்களை நோகடிக்காமல் சிரிக்க வைப்பது. இதன் காரணமாக கோலிவுட்டின் அடையாளங்களில் ஒருவராக மாறினார் வடிவேலு. ஆனால் அவர் ஏறிய அரசியல் மேடை அவரது கிராஃபை கடுமையாக இறக்கி வைத்தது. எனினும் இதனைத் தொடர்ந்து அவருக்கு ஏற்பட்ட சில பஞ்சயாத்துக்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார் வடிவேலு.

சில வருடங்கள் நடிக்காமல் இருந்த வடிவேலு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பெரும் எதிர்பார்ப்போடு திரையரங்குகளுக்கு சென்ற ரசிகர்கள் வடிவேலுவின் நடிப்பை பார்த்து ஏமாற்றம் அடைந்தனர். மேலும் வடிவேலு தன்னை அப்டேட் செய்துகொள்ளவில்லை என்றால் இரண்டாவது இன்னிங்ஸில் நிச்சயம் விரைவில் அவுட் ஆகிவிடுவார் எனவும் வெளிப்படையாக விமர்சனத்தை வைத்தனர்.

எனினும் இந்தச் சூழலில் வடிவேலு மாமன்னன் படத்தில் நடித்திருக்கிறார். மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் அந்தப் படத்தில் உதயநிதி ஹீரோவாக நடித்திருந்தாலும் வடிவேலுவுக்குத்தான் முக்கியமான கதாபாத்திரம் என கூறப்படுகிறது. எனவே மாமன்னன் படத்தில் தனது நடிப்பின் மூலம் தன்னை பற்றி அவதூறாக பேசுபவர்களுக்கு பதிலடி கொடுக்க வடிவேலு காத்திருக்கிறார்.

வடிவேலு மீண்டும் சினிமாக்களில் நடிக்க வந்ததால் ரசிகர்கள் உற்சாகமடைந்தாலும் அவ்வப்போது வரும் செய்திகள் அதிர்ச்சியையே கொடுக்கின்றன. சந்திரமுகி 2 படத்தில் ஷூட்டிங்குக்கு வடிவேலு ஒழுங்காக வருவதில்லை என்றும்; ஏகப்பட்ட கண்டிஷன்ஸை போடுகிறார் இதனால் பி.வாசு ரொம்பவே டென்ஷன் ஆகிவிட்டார் என்றும் சமீபத்தில் தகவல் ஒன்று கோலிவுட்டில் சிறகடித்தது. இதனையடுத்து வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிவிட்டதோ என பலர் கூறினர். இருப்பினும் அவரது பழைய காமெடி காட்சிகள் இன்றுவரை பலராலும் ரசிக்கப்படுபவை.

அத்தோடு அப்படி எத்தனையோ காமெடி காட்சிகளில் ஒன்று நேசம் புதிது படத்தில் இடம்பெற்ற'என்ன கையை புடிச்சு இழுத்தியா' என்ற காமெடி காட்சி வெகு பிரபலம். அந்தக் காமெடி காட்சியை எழுதியவர் வேல்முருகன். இவரும் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், "கையை புடிச்சு இழுத்தியா காமெடி காட்சியை படமாக்கும்போது அதில் நடித்த சங்கிலிமுருகன், "கைய பிடிச்சி இழுத்தியா, கைய பிடிச்சி இழுத்தியா இது தவிர வேற எதுவும் இதுல இல்லையே. இதுலாம் ஒர்க் அவுட் ஆகுமா? என கேட்டார்.

அதேபோல் வடிவேலுவுக்கும் அந்தக் காட்சியில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. ஆனால் நான்,"நிச்சயமாக இந்த காமெடி சிறப்பாக வரும்" என நம்பிக்கையோடு கூறினேன். நான் நினைத்ததுபோலவே அந்தக் காமெடி காட்சி வெளியான பிறகு மிகப் பிரபலமானது. அத்தோடு அந்தக் காட்சி பிரபலமான பிறகு என்னை சந்தித்த சங்கிலிமுருகன், நானும் நிறைய படங்களில் நடிச்சிருக்கேன். ஆனா இப்படி ஒரே ஒரு காமெடி காட்சி மூலமா என்னை பிரபலமாக்கிவிட்டாய் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்" என்றார்.


Advertisement

Advertisement

Advertisement