• Apr 19 2024

ஹனிமூன் கொண்டாடும் ஹன்சிகா...அடடே எங்கு எல்லாம் போயுள்ளார் பாருங்க..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை ஹன்சிகா மோத்வானி வெளிநாடுகளில் ஹனிமூன் கொண்டாடி வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர் ஹன்சிகா மோத்வானி. அத்தோடு தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா தொடர்ந்து விஜய், ஜெயம் ரவி, சிம்பு, சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளர். இந்தி தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் ஹன்சிகா மோத்வானி.

இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி, கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி தனது தொழில் பார்ட்னரும் நீண்ட நாள் காதலருமான சோஹேல் கதூரியாவை திருமணம் செய்து கொண்டார். சோஹேல் கதூரியா பாரிஸில் உள்ள ஈஃபிள் டவர் முன்பு, ஹன்சிகாவில் Marry Me i love you என சினிமா பாணியில் ப்ரபோஸ் செய்தார்.அத்தோடு  சோஹேல்லின் ப்ரபோஸலை ஏற்றுக்கொண்ட ஹன்சிகா மோத்வானி, அவரை கட்டியணைத்து முத்தம் கொடுத்தார்.


அந்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் ஹன்சிகா மோத்வானி. அதனை தொடர்ந்து அடுத்த ஒரு சில நாட்களில் தங்களின் திருமணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டார். அதன்படி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமையான முண்டோட்டா அரண்மனையில் அவர்களின் திருமணம், சங்கீத், ஹல்தி என வெகு விமரிசையாக நடைபெற்றது. அவர்களின் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து கூறினர்.



அதன் பின்னர்  ஒவ்வொரு நாளும் ஒன்று என ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேல்லின் திருமண வைபவ போட்டோக்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தது. அதனை தொடர்ந்து குடும்ப வழக்கப்படி தனது கணவருக்கு இனிப்பு செய்து கொடுத்து அசத்தினார் ஹன்சிகா. அந்த போட்டோக்களும் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியது. இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானியும் அவரது கணவரும் வெளிநாடுகளில் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர்.



பாரிஸ், செக் குடியரசின் பிராக், ஜெர்மணி, ஆஸ்திரியா என பல்வேறு நாடுகளிலும் நகரங்களிலும் ஹன்சிகா மோத்வானியும் சோஹேல் கதூரியாவும் ஹனிமூனை கொண்டாடி வருகின்றனர். தற்போது ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இருந்து தனது போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா மோத்வானி. அத்தோடு அவருடைய ஹனிமூன் போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

ஹன்சிகா மோத்வானி தற்போது பார்ட்னர், கார்டியன், ரவுடிபேபி உள்ளிட்ட 5 படங்களில் நடித்து வருகிறார். இதேபோல் இரண்டு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா மோத்வானி. அத்தோடு திருமணத்திற்கு முன்பாக படப்பிடிப்பில் பங்கேற்க சென்னை வந்த நடிகை ஹன்சிகா மோத்வானி காளிகாம்பாள் கோவிலில் வழிபாடு செய்தார். சினிமா மட்டுமின்றி வெப் சீரிஸ்களிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement