இன்ஸ்டாவில் வைரலாகும் சஹானாவின் ஹனிமூன் புகைப்படங்கள்

1407

சன், விஜய் தொலைக்காட்சிகளில் நிறைய சீரியல்கள் நடித்து மக்களிடம் பிரபலமானவர் நடிகை சஹானா ஷெட்டி.அரூபம் என்ற திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான சஹானா ஷெட்டி. தொடர்ந்து பல படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

பட வாய்ப்புகள் வராததால் உடனே சின்னத்திரை பக்கம் வந்தார். அழகு, பகல் நிலவு, சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தற்போது கண்ணான கண்ணே என தொடர்ந்து சீரியல்கள் நடித்து வருகிறார்.

சஹானாவுக்கு, அபிஷேக் என்ற மருத்துவருடன் ரகசியமாக திருமணம் நடந்துவிட்டதாக தகவல் கசிந்துள்ள நிலையில் ஹனிமூன் புகைப்படங்களை சஹானா தனது இன்ஸ்டாவில் பதிவு செய்த வண்ணம் உள்ளார்.

ஆடி மாதம் வருவதற்குள் திருமணம் முடித்தாக வேண்டும் என்பதால் யாருக்கும் சொல்லாமல் திருமணம் முடித்துள்ளனர்.வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.