• Dec 01 2022

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலம்..!

Listen News!
Aishu / 2 weeks ago
image
Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குநர் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

ப்ரின்ஸ், படத்தையடுத்து சிவகார்த்திகேயன் அடுத்த படமாக 'மாவீரன்' படத்தில் இயக்குநர் மடோன் அஸ்வினுடன் இணைந்துள்ளார்.

மடோன் அஸ்வின், யோகிபாபு நடிப்பில் வெளியான 'மண்டேலா' படத்தை இயக்கி இரண்டு தேசிய விருதை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த மாவீரன் படத்திற்கு தெலுங்கில் இந்த படத்திற்கு மஹாவீருடு என பெயரிடப்பட்டுள்ளது.அத்தோடு இந்த மாவீரன் படத்தை பிரின்ஸ் படத்தை தயாரிக்கும் சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.

இந்த மாவீரன் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன்பு பூஜையுடன் துவங்கியது.மேலும்  இந்த பூஜையில் இயக்குநர் ஷங்கர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். அத்தோடு மற்ற முக்கிய வேடத்தில் மிஷ்கின் & சரிதா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகரான சுனில் இணைந்துள்ளார். எனினும் கடந்த வருடம் அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்தில் ‘மங்களம் சீனு’ என்ற கதாபாத்திரத்தில் சுனில் வில்லனாக நடித்திருந்தார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக விது ஐயனா பணிபுரிகிறார். பரத் சங்கர் இசையமைக்க உள்ளார். அத்தோடு இவர்கள் ஏற்கனவே மண்டேலா படத்தில் பணிபுரிந்தவர்கள்.

இவ்வாறுஇருக்கையில்  இந்த படத்தில் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் இணைந்துள்ளார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யானிக் பென், தமிழில் துருவ நட்சத்திரம், வெப் சீரிஸான The Family Man-லும் பணிபுரிந்தவர்.எனினும்  சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு, யசோதா படத்திலும் ஸ்டண்ட் இயக்குநராக பென் பணிபுரிந்தவர்.