விஜய் டிவி பிரியங்காவுடன் அவரது தாயார்-இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

337

தமிழ்த் தொலைக்காட்சிகளில் தற்பொழுது முன்னணியில் உள்ள தொலைக்காட்சியாக விஜய் தொலைக்காட்சி காணப்படுகின்றது. இதில் மக்களைக் கவர்ந்த நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வருபவர் தொகுப்பாளினி ப்ரியங்கா.

மேலும் இவர் முதன் முதலில் சுட்டி டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியக அறிமுகமானவர்.

இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஒல்லி பெல்லி நிகழ்ச்சியில் ஈரோடு மகேஷ் உடன் இணைந்து தொகுத்து வழங்கி வந்தார். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி தந்தது.

மேலும் அங்கே துவங்கிய இவரது பயணம் தற்போது சூப்பர் சிங்கர், தி வால், ஸ்டார்ட் ம்யூஸ்க் என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வழங்கி வந்து மக்கள் மத்தியில் மிகவும் ஹிட் ஆன தொகுப்பாளினியாக விளங்குகிறார்.

சில தினங்களுக்கு முன் கூட தொகுப்பாளினி பிரியங்கா, உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செய்தியைக் கேட்ட ரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது.

இதனை அவரே தனது யூடுயூப் தளத்தின் வாயிலாக தெரிவித்திருந்தார். தொகுப்பாளினி பிரியங்காவின் கணவரை நாம் பார்த்திருக்கிறோம்.ஆனால் அவரது அம்மாவின் புகைப்படத்தை பலரும் பார்த்ததில்லை.

எனினும் இந்நிலையில் முதல் முறையாக தொகுப்பாளினி பிரியங்கா அவரது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்: