• Apr 23 2024

அழகில் அனுஷ்காவை மிஞ்சிய அவரது அம்மா... எது அம்மா எது பொண்ணு என்று கண்டு பிடிக்கவே முடியலைங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்து இருப்பவர் நடிகை அனுஷ்கா சர்மா. தனது திரையுலக வாழ்க்கையில் இதுவரை 22 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். 


மேலும் அனுஷ்கா திரையுலகிற்கு அறிமுகமாகும் போதே யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டுடியோவுடன் 'ரப் நே பனா தி ஜோடி, பத்மாஷ் கபன்னி' மற்றும் 'பேண்ட் பாஜா பாராத்' ஆகிய 3 படங்கள் ஒப்பந்தமாகியிருத்தமை குறிப்பிடத்தக்கது.


இவர் தற்போது நடிப்பினைத் தாண்டியும் குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டுள்ளார். அனுஷ்கா சர்மா மற்றும் விராட் கோலி மிகவும் அபிமானமான பிரபல ஜோடிகளில் ஒருவராக வலம் வருகின்றனர். இவர்களின் காதல் கதையிலிருந்து அவர்கள் எப்போதும் ஒருவரையொருவர் இன்றுவரை ஆதரித்தே வருகின்றனர்.


மேலும் அவர்களின் சமூக வலைத்தளப் பக்கங்கள் மற்றும் அவர்களின் காதல் படப்பிடிப்புகள் வரை எப்போதும் ஜோடி இலக்குகளையே வெளிப்படுத்தி வருகின்றார்கள். சமீபத்தில் விராட் தனது மனைவியுடன் ஒன்றாக படப்பிடிப்பில் ஈடுபட்ட  BTS வீடியோவைப் பகிர்ந்த்தார்.

அந்தவகையில் இவர்களின் மண வாழ்க்கை பற்றி நோக்குவோமாயின் அனுஷ்கா சர்மாவும் விராட் கோலியும் சில வருடங்கள் டேட்டிங் செய்த பிறகே 2017-இல் திருமணம் செய்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து இத்தம்பதியினருக்கு 2021 இல் ஒரு அழகிய மகள் பிறந்தார். 


இந்தப் பிரபல ஜோடியானது சமீபகாலமாகவே தாங்கள் இருவரும் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களின் ஊடாக பதிவிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியினைக் கொடுத்து வருகின்றனர். 


இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக அனுஷ்கா சர்மா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தாய் மற்றும் தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றினைப் பகிர்ந்திருக்கின்றார்.


அதில் அனுஷ்காவின் அம்மா இளமை குறையாமல் ரொம்பவே அழகாக இருக்கின்றார். இதனால் இப்புகைப்படமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement