• Apr 20 2024

டேய் நான்தான் பேசிட்டு இருக்கேன்ல - ஷூட்டிங்கில் வேட்டியை மடித்து சண்டையில் இறங்கிய விஜயகாந்த்- நடந்தது என்ன?

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் மனோபாலாவும் அவரது நண்பர் பி.எஸ். மாதவனும் இணைந்து ஒரு கதையை தயார் செய்திருக்கின்றனர். அதாவது, சவப்பெட்டி செய்யும் கிறிஸ்தவ ஹீரோ மற்றும் அவரது தாய் ஆகியோரை பிரதான கதாபாத்திரங்களாக வைத்துக்கொண்டு காதலை சேர்த்துவைக்கும்படி ஒரு மென்மையான கதையை செய்திருக்கின்றனர். இந்தக் கதையில் மம்மூட்டி நடித்தால் நன்றாக இருக்கும் என்பதால் மம்மூட்டிசைச் சந்திக்க சென்றுள்ளார் மனோபாலா.


திருவனந்தபுரத்தில் மம்மூட்டியை சந்தித்து மனோபாலா கதை சொல்லியிருக்கிறார். கதையை கேட்ட மம்மூட்டியும் படத்தில் நடிக்க ஓகே சொல்லிவிட மற்ற பணிகளையும் ஆரம்பித்திருக்கின்றனர்.இப்படிப்பட்ட சூழலில் திடீரென ஒருநாள் மனோபாலாவை அழைத்து இந்தக் கதையில் விஜயகாந்தே நடிக்கட்டும்; அவரிடம் எப்படியாவது நான் தேதியை வாங்கி கொடுத்துவிடுகிறேன் என கூறியிருக்கிறார். ஆனால் இந்தக் கதை எப்படி விஜயகாந்த்துக்கு ஒத்து வரும் என மனோபாலா கேட்க; அதெல்லாம் ஒத்துவரும் என ராவுத்தர் கூற; வேறு வழியின்றி மனோபாலாவும் ஒப்புக்கொண்டு கதையில் சிறிய சிறிய மாற்றங்களை செய்துள்ளார்.


ஒருவழியாக எல்லாம் இறுதி செய்யப்பட்டு நாகர்கோவில் அருகே படத்தின் ஷூட்டிங் நடந்திருக்கிறது. ஷூட்டிங் நடந்த இடத்தில் இடையில் ஒரு ஆறு இருந்திருக்கிறது. ஆற்றுக்கு ஒரு பக்கம் கிறிஸ்தவர்களும், மறுபக்கம் குறிப்பிட்ட சமுதாயத்தினரும் இருந்திருக்கின்றனர். ஷூட்டிங் நடந்ததோ குறிப்பிட்ட சமுதாயத்தின் இடத்தில் இதனைக் கண்ட கிறிஸ்தவர்கள் எங்கள் ச்ம்பந்தப்பட்ட கதையை எப்படி நீங்கள் அங்கு எடுக்கலாம் என கேட்க, எங்கள் இடத்தில் ஷூட்டிங் நடத்துபவர்களை பத்திரமாக நாங்கள் அனுப்பி வைப்போம். இங்கு ஷூட்டிங் நடந்தால் கேட்பதற்கு நீங்கள் யார் என இவர்கள் கேட்க அந்த இடமே போர்க்களமாக மாறும் சூழல் உருவாகியிருக்கிறது.


நிலைமை கைமீறி போவதை உணர்ந்துகொண்ட விஜயகாந்த் காரிலிருந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்திருக்கிறார். ஆனால் சமாதானம் ஆகவே இல்லையாம். இதனையடுத்து கோபத்தின் உச்சத்துக்கு சென்ற விஜய்காந்த் மாறி மாறி கத்திக்கொண்டிருந்தவர்களிடம், 'டேய் நான்தான் பேசிட்டு இருக்கேன்ல ஏன் நீ ஏன் இடையில கத்துற' என தொடர்ந்து கத்திக்கொண்டிருந்தவர்களிடம் வேட்டியை மடித்துக்கொண்டு சத்தத்துடன் கேட்டாராம். விஜயகாந்த் கோபப்பட்டதை பார்த்த பிறகுதான் இரண்டு தரப்பினரும் சமாதானம் ஆனார்களாம். அதன் பிறகு அங்கிருந்து கிளம்பி படத்தின் ஷூட்டிங் முட்டத்திலும், சென்னையிலும் நடந்திருக்கிறது.


ஒருவழியாக படத்தின் ஷூட்டிங் முடிந்து படத்தை பார்த்த பிறகு இயக்குநர் மனோபாலாவுக்கு பெரிய அளவில் திருப்தி இல்லையாம். இதனையடுத்து லியாகத் அலிகான் கொடுத்த ஆலோசனையின் பெயரில் படத்தின் க்ளைமேக்ஸ் மற்றும் சில சீன்களில் திருத்தம் செய்யப்பட்டு படம் வெளியாகியிருக்கிறது. ஆனால் படம் யாரும் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. ஒன்றுக்கு மூன்று மடங்கு லாபம் ராவுத்தர் பிலிம்ஸுக்கு கிடைத்திருக்கிறது. அந்தப் படம்தான் மூன்றெழுத்தில் என் மூச்சு இருக்கும். இதனை மனோபாலா தனது யூடியூப் சேனலில் பகிர்ந்திருக்கிறார்.


Advertisement

Advertisement

Advertisement