• Apr 25 2024

கார்த்திகை தீபம் என்னும் புதிய சீரியலில் ஹுரோவான கார்த்திக்- வெளியான அட்டகாசமான ப்ரோமோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்னும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் கார்த்திக். இவர் இதனைத் தொடர்ந்து ஜோடி நம்பவர் சீசன் 7,  ஒவ்பீஸ் போன்ற சீரியல்களில் நடித்திருக்கின்றார்.

 இது தவிர முகிலன், பிளக் அன்ட் வைட், நாலு பேருக்கு நல்லது என்றால் எதுவும் தப்பில்ல போன்ற சில திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார்.


இருப்பினும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது செம்பருத்தி சீரியல் என்று தான் கூற வேண்டும். ஷு தமிழில் ஒளிபரப்பான இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தாலும் திடீரென சீரியலை விட்டு விலகினார்.


இதனை அடுத்து தற்பொழுது மீண்டும் கார்த்திகை தீபம் என்னும் சீரியலில் கமிட்டாகியுள்ளார். இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. மீண்டும் கார்த்திக்கை சின்னத்திரையில் பார்க்க இருப்பதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement