• Sep 26 2023

41 வயதான அனுஷ்காவின் திருமணம் எப்போது... அவரே கூறிய தகவல் இதோ..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான ரெண்டு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் அனுஷ்கா. இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி இவர் நடித்த அருந்ததி திரைப்படம் இவருக்கு நல்லதொரு அடையாளத்தைக் கொடுத்தது.


இது தவிர பாகுபலி திரைப்படமும் இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் தேவசேனா என்கிற கேரக்டரில் நடித்திருந்த அனுஷ்கா, தன்னுடைய அபார நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இப்படத்திற்கு பின்னர் இவரும் நடிகர் பிரபாஸும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன. ஆனால் அந்த விடயம் அப்படியே மறைந்து விட்டது.  

அனுஷ்காவிற்கு தற்போது 41வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருந்து வருகின்றார். இந்த நிலையில் ஐதராபாத்தில் பட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்காவிடம் திருமணம் எப்போது என்ற கேள்வி கேட்கப்பட்டது. 


இதற்கு அனுஷ்கா பதிலைக்கயில் ''நிஜமாகவே இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. திருமணம் என்பது இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும். அதற்கான நேரம் வரும்போது அது இயல்பாகவே நடக்கும்" எனக் கூறியுள்ளார்.

மேலும் "திருமணம் செய்து கொள்ளும் திட்டம் எனக்கு இப்போது இல்லை. கல்யாணம் என்பது மகிழ்ச்சியான விஷயம். அது அமையும்போது எல்லோருடனும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்'' எனவும் தெரிவித்துள்ளார் நடிகை அனுஷ்கா.

Advertisement

Advertisement

Advertisement