• Sep 22 2023

ஈழப் போராட்டத்தில் மாமா உயிரிழப்பு... மனம் உருகிப் பாடிய கில்மிஷா... கண் கலங்கி அழுத அரங்கம்... Video இதோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான் பாடல் நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானது. அந்நிகழ்ச்சியை தொடர்ந்து கடந்த சில வருடங்களுக்கு முன் இதற்கு இணையாக ஜீ தமிழில் சரிகமப என்ற பாடல் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பலரும் பங்கு கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.


அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் இருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சிறுமி கில்மிஸாவும் தனது குரல்வளத்தை சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.


இந்நிலையில் நேற்றைய தினம் வெளியான ப்ரோமோ வீடியோ பலரையும் கண் கலங்கி அழ வைத்துள்ளது. அதில் கில்மிஷா "கண்டால் வர சொல்லுங்க.." என்ற பாடலை பாடி இருக்கின்றார். இப்பாடலை அவர் தனது மாமாவிற்காக பாடி இருக்கின்றார். 


அதாவது அவருடைய மாமா ஈழப் போராட்டத்தில் உயிரிழந்துள்ளார். அவரை நினைத்து கில்மிஷா மனம் உருகிப் பாடிய பாடல் அவரது தாயாரை மட்டுமன்றி பலரது மனதையும் நெகிழச் செய்துள்ளது. அதுமட்டுமல்லாது இதனைப் பார்த்து மற்றுமோர் ஈழத்துப் பெண்ணாகிய அசாணியும் கண் கலங்கி அழுதுள்ளார்.

இதோ அந்த வீடியோ ..!

Advertisement

Advertisement

Advertisement