• Sep 22 2023

சமந்தாவின் காதலுக்காக அலையும் விஜய் தேவர்கொண்டா... அட்டகாசமாக வெளிவந்த குஷி பட ட்ரெய்லர் வீடியோ இதோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இயக்குநரான ஷிவா நிர்வாண இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் தற்போது 'குஷி' திரைப்படம் தயாராகி வருகின்றது. இப்படத்தின் உடைய முதல் கட்ட படப்பிடிப்பு ஆனது காஷ்மீரில் இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத், விசாகப்பட்டினம், ஆலப்புழா போன்ற இடங்களில் அமோகமாக நடைபெற்றது.


இருப்பினும் துரதிஷ்டவசமாக சமந்தாவின் உடல்நலக்குறைவால் இதன் ஷூட்டிங் தற்காலிகமாக இடையில் நின்றுபோனது. பின்னர் சிகிச்சையளிக்கப்பட்டு குணமான பின் சமந்தா மீண்டும் குஷி படத்தில் நடிக்க தொடங்கினார். 


அந்தவகையில் இப்படத்தில் இருந்து ஏற்கெனவே வெளியான என் அஞ்சலி நீயா, ஆராத்யா ஆகிய பாடல்கள் சமூக வலைத்தளங்களில் செம ட்ரெண்ட் ஆனது. மேலும் காதலர்களுக்கு, குஷி படம் கண்டிப்பாக ரொமாண்டிக் சர்ப்ரைஸாக அமையும் என பலராலும் எதிர்பார்க்கபடுகிறது. 


இந்நிலையில் இப்படம் செப்டெம்பர் 1ஆம் திகதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு நேற்று மாலை இப்படத்தினுடைய ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement