• Apr 24 2024

கதாநாயகி கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பம்.. ஊதாரியான ஹீரோ.. கவின் நடித்த 'டாடா' படத்தின் திரை விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3இன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். இருப்பினும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னரே 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரின் மூலமாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தனக்கென சம்பாதித்து இருக்கின்றார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா, அபிராபி, சாக்ஷி எனப் பலருடன் காதல் சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும். அந்நிகழ்ச்சியின் பின்னர் இவரின் வாழ்க்கையே மாறி விட்டது. அதாவது சின்னத்திரையிலிருந்து வெள்ளித் திரைக்கு மாறி விட்டார். 


அந்தவகையில் கவின் தற்போது ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் 'டாடா'. கணேஷ் கே பாபு என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்து இருக்கிறார். தந்தை மகன் பாசத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த “டாடா” படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

அந்தவகையில் இப்படத்தில் பெற்றோர்களின் பேச்சை கேட்காமல் ஊதாரியாக ஊர் சுற்றும் ஒரு கல்லூரி மாணவராக மணிகண்டன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் கவின் வருகிறார். இவர் தன்னுடன் ஒன்றாகப் படிக்கும் சிந்து என்ற பெண்ணுடன் மிகவும் நெருங்கி பழகி வருகிறார். இதனைத் தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்குகின்றனர்.


இவர்களின் இந்தக் காதல் ஒரு கட்டத்தில் கர்ப்பமாக மாறுகிறது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியில் சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் கவின் திருமணத்திற்கு பிறகும் ஊதாரியாகவே கொஞ்சம் கூடப் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றுகிறார். இதனை பார்த்த மனைவி சிந்து மிகவும் வருத்தமடைகிறார். 

அவ்வாறு இருக்கும் ஒரு நேரத்தில் இருவருக்குள்ளும் ஒரு பயங்கர சண்டை வருகிறது. அந்த சண்டையில் “நீ செத்துரு” என்று கோபத்தில் சொல்லிவிட்டு சென்று விடுகிறார் கவின். இப்படி செல்லும் நேரத்தில் சிந்துவிற்கு கர்ப்ப வலி வந்து உடனே மணிகண்டனான கவினுக்கு போன் செய்கிறார். ஆனால் இந்த அழைப்பை கண்டு கொள்ளாமல் சுவிட்ச் ஆஃப் செய்து விடுக்கிறார். 


இதனைத் தொடர்ந்து பின்பு குழந்தை பிறந்தவுடன் அந்தக் குழந்தையை மருத்துவமனையில் விட்டுவிட்டு சிந்து தன்னுடைய தாயின் வீட்டிற்கு செல்கிறார். இப்படி செல்வதால் குழந்தையை பார்த்துக்கொள்ளுகின்ற மிகப்பெரிய பொறுப்பு மணிகண்டனிற்கு வருகிறது. இந்த நிலையில் குழந்தையை வளர்க்கும் தந்தையான மணிகண்டன் பின்னர் திருந்தினாரா? குழந்தையை நல்ல படியாக வளர்த்து ஆளாக்கினாரா? மீண்டும் தன்னுடைய மனைவியை சந்தித்தாரா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை.


இருப்பினும் இப்படத்தில் தந்தை மகன் பாசத்தில் ரொம்பவே நன்றாக நடித்திருக்கின்றார் கவின். அதே போல தாயாக வரும் அபர்ணாவும் தன்னுடைய நடிப்பினால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றார். இருந்தாலும் கதாநாயகி அபர்ணாவுக்கு படத்தில் கொடுக்கப்பட்ட நேரம் குறைவாக இருக்கிறது என்று தான் தோன்றுகிறது. 

அதுமட்டுமல்லாது இப்படத்தில் சில கஷ்டமான நேரங்களில் சிரிப்பு எனும் மேஜிக்கை தூவும் பஞ்ச் கதாபாத்திரமாகவும், அறிவுரை சொல்லும் ஒரு முக்கிய கதாபாத்திரமாகவும் நடித்திருக்கிறார் விடிவி கணேஷ். அத்தோடு இப்படத்தில் வரும் பாக்கியராஜ், ஐஸ்வர்யா ஆகிய இருவரும் சில நிமிடங்களே கதையில் வந்தாலும் எப்போதும் போல பாக்கியராஜ் தன்னுடைய சிறந்த நடிப்பினால் ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறார். 


இந்தப் படத்தில் பல காட்சிகளை நாம் முன்கூட்டியே கணிக்க முடியும் என்றாலும் இந்த விஷயமானது படத்திற்கு ஒரு எதிர்மறையாக இருக்கவில்லை என்பது திரைக்கதையை லாபகரமாக நகர்த்தியத்திற்க்கு ஒரு உதாரணமாக நாம் சொல்லலாம். மேலும் படம் எந்த இடத்திலும் பார்வையாளர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் நுனி இருக்கையில் இருந்து படத்தினைப் பார்க்க வைத்திருக்கின்றது.

மேலும் இப்படத்தில் குறைகள் என்று சொல்வதற்குப் பெரிதாக எதுவுமில்லை. இருப்பினும் கிளைமாக்ஸ் காட்சியில் இன்னனும் கோசம் எமோஷன் சேர்த்து இருக்கலாம். அதுபோன்று கதாநாயகியின் தாய் நடிப்பில் பாசம் சற்று குறைவாக இருக்கின்றமையை கூறலாம்.

அதேபோல் படத்தினுடைய நிறைகள் என்று பார்க்கும் போது, படம் எந்த இடத்திலும் போர் அடிக்கவில்லை. அதேபோல் அறிமுக இயக்குநராக இருந்தாலும் திரைக்கதையை லாபகரமாக இயக்கி இருக்கிறார் கணேஷ் கே.பாபு. அதுமட்டுமல்லாது கதாபாத்திரங்கள் அனைவருமே நன்றாக நடித்திருக்கின்றனர்.

அந்தவகையில் 'டாடா' படமானது மொத்தத்தில் நிறைவான உணர்வை தரக்கூடிய தந்தை மகன் பாச போராட்ட படமாக அமைந்திருக்கின்றது. இப்படம் எதிர்பார்த்தளவிற்கு வெற்றியடையுமா இல்லையா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement

Advertisement