• Apr 01 2023

பல கோடிகளை தட்டித் தூக்கிய தனுஷ்... 'வாத்தி' படத்தின் முதல் நாள் வசூல் இதோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராகத் திகழ்ந்து வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற 'திருச்சிற்றம்பலம்' படத்தை தொடர்ந்து நேற்றைய தினம் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் 'வாத்தி' திரைப்படம் வெளியாகி இருக்கின்றது.


இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து சாய் குமார், ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி, கென் கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.


தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளிவந்த இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்த வண்ணமே இருக்கின்றனர்.


அந்தவகையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இப்படம் முதல் நாள் உலகளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்தத் தகவலின் படி இப்படம் முதல் நாள் உலகளவில் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 

அதுமட்டுமல்லாது எதிர்வரும் நாட்களில் வாத்தி படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement