• Sep 29 2024

கடும் சரிவை சந்தித்த 'பத்து தல'.. 5நாட்கள் முடிவில் பெற்ற வசூல் விபரம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்திலும், சிம்பு நடிப்பிலும் உருவான 'பத்து தல' திரைப்படம் ஆனது சமீபத்தில் உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடி இல்லை. இருப்பினும் முக்கிய கதாபாத்திரங்களில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் எனப் பலரும் நடித்துள்ளனர்.


அத்தோடு இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கன்னட மொழியில் வெளியான Mufti என்ற படத்தின் ரீமேக்காக, இப்படமானது ரசிகர்களிடமிருந்து சிறந்த வரவேற்பையும், கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகின்றது.


இப்படமானது நேற்றைய தினம் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இப்படம் வெளிவந்து 5 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 31 கோடிக்கு மேல் மட்டுமே வசூல் செய்துள்ளது.


எனவே படம் வெளிவந்து 4 நாட்களில் ரூ. 30 கோடிக்கும் மேல் வசூல் செய்திருந்த நிலையில், நேற்று ஒரு நாள் மட்டும் ரூ. 1 கோடி வரை தான் வசூல் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இது கடுமையான சரிவு எனப் பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement