• Apr 23 2024

என்ன வாய்ஸ்டா இது..? டிவி நிகழ்ச்சியில் பாட்டுப் பாடிய சமந்தா... வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா. பல படங்களில் நடித்துள்ள இவர் சமீபகாலமாக மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதற்காக தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.


அதுமட்டுமல்லாது "இதனால் பல கஷ்டங்களை அனுபவித்து வந்ததாகவும் எழுந்துகூட நடிக்கமுடியாத சூழலில் தள்ளப்பட்டு இருக்கிறேன்" என்றும் அழுதபடி சமீபத்தில் ஒரு பேட்டியும் கொடுத்திருந்தார் சமந்தா. இதனைத் தொடர்ந்து தீவிர சிகிச்சைக்காக தென்கொரியாவுக்கு செல்லவுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. 


இந்நிலையில் தற்போது சமந்தா பற்றிய எமோஷனல் வீடியோக்களை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். அந்தவகையில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது எஸ் தமனுடன் கலந்து கொண்டுள்ளார் சமந்தா. அப்போது மேடையில் பாட்டு ஒன்றினையும் பாடியுள்ளார்.


இதனைப் பார்த்து "என்ன வாய்ஸ்ப்பா இது" எனக் கேட்டு சமந்தாவை கலாய்த்து வருகிறார்கள் நெட்டிசன்கள். இதனால் தற்போது அந்த வீடியோ இணையத்தில் படு வைரலாகி வருகிறது.


Advertisement

Advertisement

Advertisement