• Apr 20 2024

துணிவு படத்தை முதன்முதலாக பார்த்த முக்கிய நபர்கள்... மிரண்டு போய்க் கூறிய விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் அஜித். இவரை ரசிகர்கள் 'தல' என செல்லமாக அழைத்து வருகின்றனர். ஏனைய முன்னணி நடிகர்களை போலவே இவருக்கும் தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகம் பூராகவும் ரசிகர்கள் உண்டு. 

அஜித் நடிப்பில் எந்தப் படம் வெளியானாலும் அந்தப் படத்திற்கு அமோக வரவேற்புக் கிடைத்து வருவது வழமை. இந்நிலையில் இவரின் நடிப்பில் தற்போது 'துணிவு' திரைப்படம் தயாராகி இருக்கின்றது. இப்படமானது வருகிற பொங்கலுக்கு வெளியாகவிருக்கின்றது.


இப்படத்தில் அஜித்துடன் இணைந்து மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பிக்பாஸ் பாவனி, அமீர் உள்ளிட்ட பல பிரபலங்களும் நடித்துள்ளனர். இதுவரை இப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று தல ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள துணிவு படத்தை வாங்கியுள்ள கேரளா விநியோகஸ்தர்கள் முதல் முறையாக அப்படத்தை போட்டு பார்த்துள்ளனர்.


மேலும் இப்படத்தில் முதல் 20 நிமிடங்கள் மட்டுமே பார்த்துவிட்டு மிரண்டு போய்விட்டார்களாம். இதனால் துணிவு படத்தின் மேல் அதீத நம்பிக்கை வைத்துள்ளதாக அவர்களிடமிருந்து ரிசல்ட் வெளியாகியுள்ளது. இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனராம்.

Advertisement

Advertisement

Advertisement