• Apr 19 2024

என்னது 'யூத்' படத்தில் மிஸ்கின் நடிச்சிருக்காரா.. நம்பவே முடியல... இணையத்தில் கசிந்த புகைப்படம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். 'நாளைய தீர்ப்பு' என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவின் ஹீரோவாக அறிமுகமான இவர் இதுவரை கிட்டத்தட்ட 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கின்றார்.

இந்நிலையில் இவற்றின் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' படம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' என்ற படத்தில் விஜய் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வாரிசு படத்தின் ரிலீசுக்கு பின் வெளியாகும் என லோகேஷ் கூறியுள்ளார்.


அந்தவகையில் விஜய்யின் திரைப்பயணத்தில் ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்று 'யூத்'. கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்களின் மனதை ஈர்த்த இப்படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியிருந்தார்.


இப்படத்தில் தான் இயக்குநர் வின்சென்ட் செல்வாவின் துணை இயக்குநராக மிஸ்கின் பணிபுரிந்துள்ளார். இந்நிலையில், யூத் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலில் அப்படத்தில் துணை இயக்குநராக பணிபுரிந்த மிஸ்கின் நடித்துள்ளார். அந்த காட்சியின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகிய நிலையில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..!


Advertisement

Advertisement

Advertisement