• Mar 27 2023

தேநீர் தயாரிப்பாளராக மாறிய பிரபல வில்லன் நடிகர்... வைரலாகும் க்யூட் வீடியோ இதோ..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல இந்திய திரைப்பட நடிகர்களில் ஒருவர் ஆசிஷ் வித்யார்த்தி. இவர் அதிகளவான படங்களில் எதிர்மறை நாயகனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். அந்தவகையில் 'பாபா, கில்லி, மாப்பிள்ளை, உத்தம புத்திரன்' உட்பட பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர்.


இவர் தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் விதவிதமான உணவுகளை சுவைத்து அதுகுறித்து வீடியோ வெளியிட்டும் வருவார். அந்தவகையில் சமீபத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி ’ரசகுல்லா டீ’ என்ற புதுவிதமான தேனீரை சுவைத்துப் பார்த்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். 

அதாவது சில மாதங்களுக்கு முன்பு, தெருவோர வியாபாரி ஒருவர் ’ரசகுல்லா சாய்’ தயாரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலானது. இந்த வினோதமான ரசகுல்லா சாய் கொல்கத்தாவைச் சேர்ந்தது. சமீபத்தில், நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி இந்த தனித்துவமான சாயை முதன்முறையாக முயற்சித்தார். 


அந்தவகையில் இன்ஸ்டாகிராமில் ஒருவர் பதிவேற்றிய வீடியோவில், இவர் எவ்வாறு தேநீர் தயாரிக்கின்றார் என்பதைப் பார்க்கலாம். முதலில், டீ தூள்,பால், சர்க்கரை, இஞ்சி போன்ற பொருட்களைக் கொண்டு வழக்கமான சாயை தயார் செய்கிறார். அதன் பிறகு,  ஒரு ரசகுல்லாவை எடுத்து ஒரு குல்ஹாத்தில் (குல்ஃபி பரிமாறும் மண் கப்) வைக்கிறார். பின்னர் அதன் மேல் தயாரித்த தேனீரை ஊற்றி இறுதியாக சிறிது வெண்ணெய் கொண்டு அதனை அலங்கரிக்கிறார். 


இந்த வித்தியாசமான காம்பினேஷன் பிடித்துபோன நடிகர் வித்யார்த்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கொல்கத்தாவில் ஒரு தெரு வியாபாரி இந்த பானத்தை செய்து கொண்டிருந்தார். கொதிக்கும் தேநீரில் இஞ்சி துண்டுகளை தட்டிப் போட்டார். பின்னர் அந்த தேநீரை ஒரு மண் குவளையில் ஊற்றினார். அந்தக் குவளையில் ஒரு பீஸ் ரசகுல்லா இருந்தது. டீயின் சூட்டில் ரசகுல்லா முழுவது ஊறிவிட்டது. இது முற்றிலும் வித்தியாசமாக உள்ளது. சும்கா சோமோக். ரொம்ப ருசியாக இருக்கிறது. தேநீர் முக்கிய பிரெட் போல் ரசகுல்லா ருசிக்கிறது. நீங்கள் எல்லோரும் ஒருமுறையாவது ரசகுல்லா தேநீரை ட்ரை பண்ணுங்க" எனக் கூறி கிண்டலாக பதிவிட்டிருக்கின்றார்.

இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பலவிதமாக ரியாக்ட் செய்துள்ளனர். ஒருசிலர் நிச்சயம் ஒருநாள் நாமும் இதனை ட்ரை செய்து பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இருப்பினும் இன்னும் சிலர் இதைப் பார்த்தாலே கோபம் தான் வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமல்லாது "நடிப்புத் தொழிலை விட்டு இப்போ தேநீர் தயாரிக்கும் தொழிலில் இறங்கி விட்டீர்களா எனவும் ஒரு சிலர் கேட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement