• Dec 01 2022

ரொபேர்ட் மாஸ்டரை அடிக்க ஓங்கிய ரச்சிதா.. ஆனாலும் அப்பாவி போல் சுத்தி வந்த மாஸ்டர்... வைரலாகும் வீடியோ இதோ..!

Listen News!
Prema / 3 weeks ago
image
Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் இதன் 6 ஆவது சீசனானது தற்போது ஆரம்பமாகி விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இது கிட்டத்தட்ட 3 வாரங்களை நிறைவு செய்ய இருக்கின்றது.

ஒவ்வொரு வாரமும் யார் வெளியேற போகிறார்கள். எந்த போட்டியாளர் யாரை நாமினேஷன் செய்யப்போகிறார்கள் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பார்கள். ஏனெனில் நாமினேஷன் ரவுண்டில் தான் போட்டியாளர்களின் இன்னொரு முகம் தெரியும்.


அந்தவகையில் சாந்தி, ஜிபி முத்து, அசல் ஆகியோர் இந்தப் போட்டியிலிருந்து வெளியேறி விட்டார்கள். மீதமாக இருப்பது 18 பேர் மட்டுமே. இவர்களுக்கு இடையில் சண்டை, கோபம், அழுகை என அனைத்து விதமான உணர்ச்சிகளும் நாளுக்கு நாள் வெளிப்பட்ட வண்ணம் தான் இருக்கின்றது.

அதேபோன்று மறுபுறம் காதல் லீலைகளும், ரொமாண்டிக் பார்வைகளும் தொடர்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது ஒரு புறம் அசல் நிவாஷினி ஜோடியின் அலப்பறைகளும், மறுபுறம் ரொபேர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் காதல் பார்வைகளும் நீண்ட வண்ணம் தான் இருக்கின்றன. ஆனால் தற்போது அசல் போட்டியிலிருந்து வெளியேறியமையால் ரசிகர்கள் அந்த ஜோடி பற்றி பேசுவது இல்லை.


இந்நிலையில் தற்போது பிக்பாஸ் ரசிகர்கள் ரொபேர்ட் மாஸ்டர் மற்றும் ரச்சிதா ஜோடியினரை வைத்து வீடியோ ஒன்றினை எடிட் செய்து இருக்கின்றனர். அதாவது சேலையில் கொண்டையுடன் வந்த ரச்சிதா பேசும் போது அதனை காதல் பார்வையுடன் பார்க்கின்றார் ரொபேர்ட்.

உடனே ரச்சிதா அவரை அடிப்பதற்கு கை ஓங்குகின்றார். ஆனாலும் மாஸ்டர் அவரை காதல் பார்வையுடன் சுத்தி சுத்தி வருகின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் "சுத்தி சுத்தி வந்தீங்க" என்ற பாடலை வைத்து எடிட் செய்து இருக்கின்றனர். இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.