• Apr 24 2024

ராசி பலன் என்ற பேரில் நிவாஷினியை புட்டுப் புட்டு வைத்த அமுதவாணன்... வைரலாகும் வீடியோ இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 ஆவது சீசனானது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதில் நகைச்சுவைக்கும், பரபரப்பிற்கும் என்றைக்குமே பஞ்சம் இருப்பதில்லை. அந்தவகையில் இன்றைய தினத்திற்குரிய டாஸ்க்காக ராசி பலன் சொல்லுதல் நிகழ்வு இடம்பெறுகின்றது. இதில் அமுதவாணன் ஒவ்வொருவரிற்குமுரிய பலன்களைக் கூறுகின்றார்.


அதாவது "மகேஸ்வரி இதற்கு முன்னாடி வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டம், நஷ்டம் அனுபவிச்சு இருந்தாலும் இந்த வீட்டுக்குள்ள இவங்க பண்ணுறது இந்தப் பொட்டியை இண்டைக்கு வைக்கலாமா, நாளைக்கு வைக்கலாமா என்பது தான். அதுக்கெல்லாம் நீங்க கவலைப்படாதீங்க இந்தப் பொட்டியை நீங்க இந்த வீட்டுக்குள்ளேயே வச்சிருக்கலாம்.

சிரிப்பைக் குறைச்சிட்டு கொஞ்சம் சிந்திச்சீங்க என்றால் நல்லா இருக்கும். உங்களுடைய சிரிப்பு தான் உங்களுக்கு பெரிய ஆபத்து" எனக் கூறியிருந்தார். அதுமட்டுமல்லாது "ஏழாவது சனி பக்கத்திலேயே இருக்கு, 8ஆவது சனி கூடவே இருக்கு" எனவும் மஹேஸ்வரியைப் பார்த்துக் கிண்டலாக கூறி இருந்தார்.


அடுத்ததாக தனலட்சுமி பற்றிக் கூறுகையில் "தனலட்சுமி எல்லாரும் தன்னோட காலுக்கு கீழ தான் இருக்கணும் என்று நினைப்பாங்க, அதுக்கு காரணம் அவங்க கட்டை விரல் பெரிதாக இருப்பதனால் கூட இருக்கலாம். எவ்வளவு தோல்வி வந்தாலும் அதை வெற்றியாக மாத்தக் கூடியவர்" எனத் தெரிவித்தார்.


அதேபோன்று நிவாஷினி பற்றிக் கூறுகையில் "நிவா எப்போதுமே தோல்வியை சந்தித்த அவங்க இனிமேலும் வெற்றியைத் தான் சந்திக்கப் போறாங்க. எப்போதுமே அவங்க போலியை விட அசலைத் தான் நம்புவாங்க, அந்த அசல் மேலேயே உங்களுக்கு சில நேரம் சந்தேகம் இருக்கலாம். ஆனால் இன்னும் 3மாசத்துல நீங்க அசலாவே வாழ்வீங்க. கூடிய சீக்கிரமே நீங்க அசல் என்ற அந்த வெற்றியை சந்திப்பீங்க" என்று கிண்டலாக கூறியிருந்தார்.

இந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement

Advertisement