• Apr 20 2024

'பிச்சைக்காரன்-2' படம் எப்படி உள்ளது..? ரசிகர்களின் ட்விட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

பிச்சைக்காரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி தானே நடித்து, இயக்கி தயாரித்துள்ள படம் பிச்சைக்காரன்2. இப்படத்தில், காவ்யா தாபர், ரித்திகா சிங், மன்சூர் அலி கான், ராதா ரவி, ஜான் விஜய், தேவ் கில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


ஏற்கெனவே திரையரங்கில் வெளியாக இருந்த இப்படத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னையை சேர்ந்த ராஜகணபதி என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், தங்களது தயாரிப்பு நிறுவனம் நடிகர் ஆர்.பாண்டியராஜன் நடிப்பில் ஏற்கனவே ஆய்வுக்கூடம் என்ற படத்தை தயாரித்து கடந்த 2016 ம் ஆண்டு வெளியான படத்தின் கதையை தங்களின் அனுமதியின்றி அப்படியே காப்பியடித்து விஜய் ஆண்டனி படத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.


இதனையடுத்து பட ரிலீஸ் தேதி ஆனது பின்னுக்கு தள்ளிப் போனது. தற்போது இப்பிரச்சினைகள் யாவும் முடிவுக்கு வந்து இன்றைய தினம் படம் வெற்றிகரமாக ரிலீசாகி உள்ளது. இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து கூறிய விமர்சனத்தைப் பார்ப்போம்.

அந்தவகையில் நெட்டிசன் ஒருவர் கூறுகையில் "இப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சி அல்ல, தனிப் படம். ஆனால் பொருத்தமான தலைப்பு. குறைந்த செலவில் உருவாகியுள்ளது. திரைக்கதை மந்தமாக இருக்கிறது. உணர்ச்சி ரீதியான தொடர்பு இல்லை. படம் முழுவதும் 1/2 சுவாரசியமான காட்சிகள். இருந்தாலும் முழுமையான ஏமாற்றம்" எனக் கூறியுள்ளார்.


அதேபோல் மற்றோரு நெட்டிசன் "இது ஒரு அவரேஜ் ஆன படம் தான்" எனக் கூறியுள்ளார்.


அதேபோன்று மற்றோரு நெட்டிசன் கூறுகையில் "பிச்சைக்காரன்-மொக்கைக்காரன்" எனக் கூறியுள்ளார்.

மற்றோருவர் கூறுகையில் "50 நிமிடங்களாக படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் முதல் 20 நிமிடங்களுக்கு எந்த திருப்பங்களும் இல்லாமல் படம் மிகவும் மெதுவாக செல்கிறது. இப்போது வரை படம் மிகவும் போர்தான் அடிக்கிறது" என்று அந்த ரசிகர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். 


இவ்வாறாக பிச்சைக்காரன் படத்தைப் பார்த்த ரசிகர்கள் மோசமான விமர்சனங்களை முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement