• Apr 19 2024

தொடர் தோல்விகளை சந்தித்த சந்தானம்... கை கொடுத்ததா 'ஏஜெண்ட் கண்ணாயிரம்'... டுவிட்டர் விமர்சனம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகனாகத் தன்னுடைய பயணத்தை ஆரம்பித்து தற்போது கலக்கல் நாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சந்தானம். இவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள படம் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்'. இப்படத்தை மனோஜ் பீதா என்பவர் வித்தியாசமான கதையம்சத்துடன் இயக்கி இருக்கிறார்.


மேலும் இப்படமானது தெலுங்கில் நவீன் போலிஷெட்டி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற 'ஏஜெண்ட் ஸ்ரீவத்சவா' என்ற படத்தின் உடைய தமிழ் ரீமேக் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அத்தோடு இப்படத்தில் நடிகர் சந்தானம் ட்டெக்டிவ் ஏஜெண்டாக நடித்து அசத்தி இருக்கின்றார்.

இப்படத்தில் கதாநாயகியாக ரியா சுமன் நடித்துள்ளா. அதுமட்டுமல்லாது இவர்களுடன் இணைந்து முனீஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லி, புகழ், சுருதி ஹரிஹரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


அத்தோடு இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பிரமாண்டமான முறையில், மனதை உருக்கும் வகையில் இசையமைத்து உள்ளார். இந்நிலையில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி உள்ள 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' படத்தினுடைய டுவிட்டர் விமர்சனம் பின்வருமாறு காணப்படுகின்றது. 

அந்தவகையில் இந்தப் படத்தைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் குறிப்பிடுகையில் "ஏஜெண்ட் கண்ணாயிரம் படத்தில் இயக்குநர் மனோஜ் காமெடி மற்றும் திரில்லரை சமமாக கொடுத்து உள்ளதாகவும், சந்தானத்தின் நடிப்பு மற்றும் காமெடி நன்கு ஒர்க் அவுட் ஆகி உள்ளது. முனீஷ்காந்த் மற்றும் புகழின் டைமிங் காமெடிகள் கவனம் ஈர்க்கின்றன. யுவனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்" எனத் தெரிவித்துள்ளார்.


இன்னொரு நெட்டிசன் குறிப்பிடுகையில் "இதில் புது சந்தானத்தை பார்த்த அனுபவம் இருக்கின்றது. அதுமட்டுமின்றி, சந்தானம் நடிப்பு மற்றும் நடிப்போடு காமெடியிலும் அசத்தியிருப்பதாகவும், யுவனின் இசை அருமை என தெரிவித்துள்ளதோடு, படம் நிச்சியம் வெற்றி பெறும்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.


மற்றொரு ரசிகர் தனது டுவிட்டர் பதிவில் "ஏஜெண்ட் கண்ணாயிரம் படம் இப்போதான் பார்த்தேன், வித்தியாசமாக இருக்கு. இதுக்கு முன்பு சந்தானத்தை இந்த மாதிரி கதாபாத்திரத்தில் பார்த்ததில்லை. யுவனின் இசை பக்க பலம். சரியான படம் போய் பாருங்க”"என குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் வேறோர் நெட்டிசன் போட்டுள்ள டுவிட்டில் "ஏஜெண்ட் கண்ணாயிரம் என்ன ஒரு அருமையான திரில்லர் படம். சந்தானத்தின் காமெடி, செண்டிமெண்ட் அனைத்தும் ஒர்க் அவுட் ஆகி உள்ளது. படத்தின் மேக்கிங் அருமை குறிப்பாக ஒளிப்பதிவு பிரமாதம். சரியான டிடெக்டிவ் திரில்லர் படம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறான பல விமர்சனங்களை பார்க்கும் போது இப்படத்திற்கு அதிகளவு பாசிடிவ் விமர்சனங்கள் தான் ரசிகர்களிடமிருந்து கிடைத்து உள்ளது. அந்தவகையில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து தோல்விப் படங்களாக கொடுத்துவந்த சந்தானத்திற்கு 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' ஒரு கம்பேக் படமாக இருக்கும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement