• Apr 25 2024

நயன்தாராவுடன் இருக்கும் 'பாரதி கண்ணம்மா' சீரியல் நடிகை... இதுவரை யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம் இதோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா'. ஒரு நடிகரின் திரைப்படத்திற்கு எந்தளவிற்கு ரசிகர் கூட்டம் இருக்குமோ அந்தளவிற்கு இந்த சீரியலிற்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் உண்டு. அந்தளவிற்குப் பலரது மனங்களை இந்த சீரியல் கவர்ந்திருக்கின்றது.

ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் இந்த சீரியல் ஆனது விரைவில் முடிவுக்கு வருகிறது என்று கூறப்பட்ட நிலையில், முடிவடையவில்லை என்று தற்போது உண்மையான தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் தற்போது வினுஷா தேவி நடித்து வருகிறார். 


இவருக்கு முன் கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி ஹரிப்ரியன் கதாநாயகியாக நடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது. அதாவது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரோஷினி படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றதால், பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ரோஷினி தென்னிந்திய சினிமாவின் பிரபல முன்னணி நடிகையான  லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. பலரும் பார்த்திராத இந்த அரிய புகைப்படம் ஆனது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement