• Apr 25 2024

'தளபதி 67' இல் நடிக்கவுள்ள பிக்பாஸ் பிரபலங்கள்..! அட இவருமா... அப்போ சிரிச்சு வயிறு வலிக்கப் போகுதே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகத் திகழ்ந்து வருபவர் விஜய். சுமார் 65 இற்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பில் தற்போது 'வாரிசு' திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக உருவாகவிருக்கும் திரைப்படம் 'தளபதி 67'. 


இப்படத்தின் வாயிலாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக விஜய் நடிக்கவிருக்கிறார். இதுவரை காலமும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புக்கள் வெளியாகமேலே இருந்து வந்தன. 

இருப்பினும் இந்த வருடத்தின் உடைய இறுதிக்குள் இப்படம் வெளியாகும் என தெரிகிறது. இப்படத்தில் திரிஷா கதாநாயகியாக நடிக்கிறார் என்றும், சஞ்சய் தத், பிரித்விராஜ், கவுதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்டோர் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளது.


அதுமட்டுமல்லாது மிகமுக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் மலையாள திரையுலகின் சென்சேஷன் நடிகரான மாத்திவ் தாமஸ் நடிக்கப்போவதாகவும் நேற்றைய தினம் ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தற்போது இப்படம் மற்றுமோர் தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. அதாவது பிக்பாஸ் 5 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ராஜு மற்றும் பிக்பாஸ் 6 போட்டியாளரான மைனா நந்தினி ஆகியோர் 'தளபதி 67' இல் நடிக்க உள்ளார்களாம். 


மேலும் ராஜு நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். அதை அவரே பல இடங்களில் கூறியுள்ளார். இதனால் தான் இவருக்கு இப்படத்தில் நடிப்பதற்கு சான்ஸ் கிடைத்திருக்கலாம் எனக் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement