• Mar 25 2023

இன்று மீன் குழம்பு சாப்பிட வாறேன் என்று சொன்னாரு- மயில்சாமி மறைவு குறித்து கலங்கிய ரேகா நாயர்

stella / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் மயில்சாமி தனது 57 ஆவது வயதில் திடீரென உடல்நலக் குறைவு காரணமாக நேற்றைய தினம் இறப்புக்குள்ளானார்.இவருடைய  உடலுக்கு அஞ்சலி செலுத்த நடிகர்கள் ரஜினிகாந்த், எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு இரங்கல் தெரிவித்து இருந்தனர்.அத்தோடு இன்று இவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், நடிகை ரேகா நாயர், மயில்சாமி மறைவுக்கு பிறகு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். மயில்சாமி உடன் சமீபத்தில் ஒரு வெப் சீரிஸில் நடித்து வந்த ரேகா நாயர், அங்கே எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து உருக்கத்துடன் சில கருத்துக்களை குறிப்பிட்டிருந்தார்.


அப்படி ஒரு சூழலில்,பிரபல சேனலுக்கு ரேகா நாயர் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது "ஷூட்டிங் ஸ்பாட்டுல வரும்போது முதல் நாள் எனக்கு பிடிக்கும்னு சொல்லிட்டு ஸ்நாக்ஸ் கொண்டு வந்தாரு. முதல் நாள் ஷூட் ஆரம்பிச்சு நாலு நாள் எனக்கு லஞ்ச் கொண்டு வந்தது சார் தான். நேத்து திருவண்ணாமலை போறேன்னு சொல்லி முந்தாநேத்து ஷூட் முடிச்சோம். இதுல எமோஷனலா சில சீன் சார் பேசும் போது நான் ஓடிப்போய் அவரோட BP செக் பண்ணுவேன். சார் ஜாலியா இருங்க இந்த படம் எல்லாம் ரிலீஸ் ஆகும் போது நம்ம இன்னும் வேற லெவல்ல இருப்போம்ன்னு சொன்னேன். இண்டஸ்ட்ரில Encourage பண்றதுக்கும் ஆளே இல்லைல்ல ரேகா'ன்னு சொன்னாரு.

அதே மாதிரி 'இன்னைக்கு நீ மீன் குழம்பு பண்ணுவியா நான் வீட்ல வந்து சாப்பிடுறேன். இல்லன்னா என் வைஃப் வந்து நல்லா மீன் குழம்பு செய்வாங்க நீ என் வீட்டுக்கு வந்து சாப்பிடு' அப்படின்னாரு. நாங்க நிறைய படம் பண்ணி இருக்கோம், சீரியல் பண்ணி இருக்கோம், கடைசி நிமிஷம் என் கூட உட்கார்ந்து பேசி, கடைசியாக எங்ககூட நடிச்சிட்டு இன்னைக்கு வேற வீட்டுக்கு வரேன்னு சொன்னாரு. நான் என்ன பண்ணலாம் அப்படின்னு மார்னிங் கூப்பிட்டு பேசணும்னு நினைக்கும் போது என்னோட பிரெண்ட்ஸ் வந்து இந்த மாதிரி மயில்சாமி இறந்ததா சொன்னாங்க.


நேத்து வரைக்கும் கூடவே இருந்த மனுஷன் காணோம்னா நம்ம தேடுவோம்ல்ல, எனக்கு இறந்துட்டான்னே தோணல பார்க்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு" என ரேகா நாயர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement