• Apr 25 2024

அவர் போன் பண்ணவே இல்லை- ஆர்யாவின் கேப்டன் படத்தை மோசமாக கலாய்த்த உதயநிதி

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் கலகத் தலைவன். இந்தப் படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். மேலும் மகிழ்திருமேனி தடம், தடையறத் தாக்க, மீகாமன் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர்.

இப்படத்தில் கதாநாயகியாக நிதி அகர்வால் நடித்துள்ளார்.இப்படத்தில் வில்லனாக பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கவனம் பெற்ற நடிகர் ஆரவ் நடித்துள்ளார்.மேலும் கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.க்ரைம் த்ரில்லர் ஆக்சன் ஜானரில் கலகத் தலைவன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ட்ரெய்லர் அட்டகாசமாக உள்ளதென சினிமா ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


ஆரல் கரோலி இசையமைத்துள்ள இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் நவம்பர் 18 உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் ஆர்யாவின் நடிப்பில் வெளியான கேப்டன் படம் குறித்து உதயநிதி பேசினார்.அதில் ஆர்யா போன் செய்து கேப்டன் படம் பார்த்துட்டு போன் பண்ணுங்கனு சொன்னாரு... நான் படம் முடிச்சுட்டு போனே பன்னல... அவரும் போன் பன்னல. கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? ப்ரடேட்டரே திரும்பி எடுத்துருக்கலாமேனு கேட்டேன் என்று கூறியுள்ளார்.


இவர் கேப்டன் படத்தை கிண்டலடிக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement