• Apr 19 2024

பிக்பாஸ் போட்டியாளர்களில் இவருக்கு தான் அதிக சம்பளம்: வாரத்துக்கு ரூ. 12 லட்சமாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 16 வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 16வது சீசன் சுவாரஸ்மயாக  தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் யாருக்கு அதிக சம்பளம் என்பது  தற்போது தெரிய வந்துள்ளது.



இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் டீனா தத்தா பிக் பாஸ் வீட்டில் தங்க அவருக்கு வாரத்திற்கு ரூ. 8 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரை கொடுத்து வருகின்றாராம்.



பிக் பாஸ் 16 வீட்டில் இருப்பவர்களிலேயே அதிக சம்பளம் நடிகை சும்புல் தவ்கீர் கானுக்கு தானாம். மேலும் அவருக்கு வாரத்திற்கு ரூ. 12 லட்சம் சம்பளம் கொடுத்து வருகிறார்களாம்.



பிக் பாஸ் 16 வீட்டில் இருக்கும் பாடகர் அப்து ரோசிக் தான் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடித்த போட்டியாளர் காணப்படுகின்றார். அவருக்கு வாரத்திற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பளம் பேசப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது.



பிக் பாஸ் 16 நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் நடிகை சவுந்தர்யா சர்மாவுக்கு வாரத்திற்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 4 லட்சம் வரை சம்பளமாம்.



அத்தோடு இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் ஷாலின் பனோட் பிக் பாஸ் வீட்டில் இருக்கிறார்.மேலும்  அவருக்கு வாரத்திற்கு ரூ. 4 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் கொடுக்கிறார்களாம்.



பாலியல் புகாரில் சிக்கிய பாலிவுட் இயக்குநர் சஜித் கானுக்கு வாரத்திற்கு ரூ. 5 லட்சம் சம்பளம் கொடுக்கிறாராாம் பிக் பாஸ் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement