• Apr 18 2024

தன்னுடைய காருக்கு 3 மாதம் லோன் கட்டவில்லையாம்- கண் கலங்கிய படி பேட்டி கொடுத்த மணி மேகலை

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன் மியூசிக் சேனில் ஆங்கராக அறிமுகமாகி இன்று குக் வித் கோமாளி மணியாக பல லட்சம் ரசிகர்களை சம்பாதித்து இருக்கும் தொகுப்பாளினி தான் மணிமேகலை.லாரன்ஸ் மாஸ்டரிடம் நடன உதவியாளராக இருந்த ஹூசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் வெவ்வேறு மதம் என்பதால் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. பின்பு இருவரும் பதிவு திருமணம் செய்துக்கொண்டனர். அத்தோடு இவர்கள் இருவரும் டிசம்பர் மாதம் 5வது திருமண ஆண்டைக் கொண்டாட உள்ளனர்.


பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்துக் கொண்ட இவர்கள் தொடர்ந்து கெரியரில் முன்னேறி இப்போது ஒரு நல்ல இடத்தை அடைந்துள்ளனர். பொருளாதார ரீதியாகவும் வளர்ந்துள்ள இவர்கள் லவ் மேரேஜ் செய்த ஆரம்ப காலங்களில் அதாவது முதல் 2 வருடத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார்கள். வாடகைக்கு வீடு தேடி அலைந்ததில் தொடங்கி, நடந்தே சென்று வீடு தேடியது, கஷ்டப்பட்டு கடனை அடைத்தது என பல விஷயங்களை மணிமேகலையும் ஹூசைனும் லைஃபில் சந்தித்து இருக்கிறார்கள்.

ஒருமுறை மணிமேகலை விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் கண்கலங்கியபடி இது குறித்து பேசி இருந்தார். தற்போது  BMW கார், வீடு, சொகுசு பைக் என மிகப் பெரிய இடத்தை அடைந்திருக்கும் இவர்கள் முதன் முதலாக வாங்கிய காருக்கு 3 மாதம் லோன் கட்டவில்லையாம். 

அதற்காக பேங்கில் இருந்து இவர்களை தேடி அதிகாரிகள் வந்து, அடுத்த மாதம் லோன் கட்டவில்லை என்றால் காரை எடுத்துச் சென்றுவிடுவோம் என்று கூறினார்களாம். அதே போல் இந்த பிரச்சனை எல்லாம் சரிசெய்ய மணிமேகலை பர்சனல் லோன் கேட்டு பல பேங்குக்கு அலைந்து இருக்கிறாராம். இப்படி பல்வேறு கஷ்டங்களுக்கு பிறகு தான் இந்த இடத்தை தாங்கள் அடைந்து இருப்பதாக மணிமேகலை ஷேர் செய்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement