• Apr 25 2024

தளபதி 67 படத்தின் போஸ்டரை டிசைன் பண்ணது இவரா..! மனுசன் கையிலேயே வரைஞ்சிருக்காரு!

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துவரும் 'தளபதி 67' படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. எனவே கடந்த இரண்டு நாட்களாகவே சமூக வலைதளத்தில், #தளபதி67 என்கிற ஹேஷ்டேக் தான் செம டிரெண்டிங்கில் தொடர்ந்து இருந்து வருகிறது.

அண்மையில் தளபதி 67 படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள், இப்படத்தில் நடிக்கும் நடித்தார் நடிகைகள் குறித்த அதிகார பூர்வ தகவலை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியிட்டு அறிவித்திருந்தது படக்குழு. அந்த வகையில், தளபதி 67 படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. 


மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், நடிகை பிரியா ஆனந்த், பிக் பாஸ் சாண்டி மாஸ்டர், இயக்குநர் மிஷ்கின், நடிகர் மன்சூர் அலிகான், நடிகர் மாத்யூ தாமஸ், கௌதம் மேனன் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும்வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று தளபதி 67 படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய் பனியனுடன் கையில் ரத்தத்துடன் போஸ்டரில் தோன்றியுள்ளார். விஜய்யின் உருவம் கோட்டோவியமாக போஸ்டரில் வடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா வடிவமைத்துள்ளார்.


 கையிலேயே இந்த போஸ்டரை டிசைனர் கோபி பிரசன்னா வரைந்துள்ளார் என தெரிகிறது.கோபி பிரசன்னா சமீபத்தில் வெளியான துணிவு, வாரிசு படங்களின் போஸ்டரை வடிவமைப்பு செய்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement