• Mar 28 2023

“மூன்று முறை என்னை அழைத்தார், என்னால் எடுக்க முடியவில்லை”; அவரின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன்- ரஜினியை கதறவிட்டு சென்ற மயில்சாமி

Prema / 1 month ago

Advertisement

Listen News!

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி நேற்றைய தினம் உடல்நல குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், ரஜினிகாந்த் இன்று காலை மயில்சாமியின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு அவரது குடும்பத்தினரை சந்தித்து தன்னுடைய ஆறுதலையும் தெரிவித்து இருக்கின்றார்.


இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில் "மயில்சாமி என்னுடைய நீண்ட கால நண்பர். அவர் தீவிர எம்.ஜி.ஆர். பக்தர், அதோடு தீவிர சிவபக்தர். வருடந்தோறும் திருவண்ணாமலை கிரிவலத்துக்கு செல்லும் போதெல்லாம் எனக்கு அவர் போன் போடுவார். கடந்த ஆண்டும் எனக்கு போன் செய்துள்ளார். நான் ஷூட்டிங்கில் பிசியாக இருந்ததால் என்னால் எடுக்க முடியவில்லை. மூன்று முறை எனக்கு போன் செய்திருந்தார். திரும்ப அவரிடம் என்னால் இப்போது பேச முடியாமலேயே போய்விட்டது" எனக் கூறியுள்ளார்.


அதுமட்டுமல்லாது "சிவராத்திரி அன்று அவர் மரணமடைந்து இருப்பது தற்செயலாக நடந்தது கிடையாது. எல்லாம் ஆண்டவனுடைய கணக்கு. தன்னுடய தீவிர பக்தனை தன்னுடைய உகந்த நாளில் சிவன் கூட்டிச் சென்றுவிட்டார். விவேக் மற்றும் மயில்சாமியின் இழப்பு சினிமாவுக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் மிகப்பெரிய ஒரு பேரிழப்பு. இருவருமே நல்ல சிந்தனைவாதிகள் மற்றும் சமூக அக்கறை உள்ளவர்கள். மயில்சாமியின் வாரிசுகள் சினிமாவில் நல்ல இடத்தை அடைய அந்த இறைவனிடம் நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.


மேலும் நடிகர் மயில்சாமி நேற்று அதிகாலை சிவராத்திரி பூஜையில் பங்கேற்றபோது, ரஜினிகாந்தை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலுக்கு அழைத்து வந்து அங்குள்ள லிங்கத்திற்கு பாலாப்ஷேகம் செய்ய வைக்க வேண்டும் அது தனது நீண்ட நாள் ஆசை என டிரம்ஸ் சிவமணியிடம் கூறி இருந்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.


இதுகுறித்தும் இன்று அஞ்சலி செலுத்த வந்த ரஜினிகாந்த் பேசியிருக்கின்றார். அதாவது “மயில்சாமியின் நீண்டநாள் ஆசையை நானும் கேள்விப்பட்டேன். அந்த சிவன் கோவில் நிர்வாகிகளிடம் நான் பேசுகிறேன். அது அவரது கடைசி ஆசை என்பதால் நிச்சயம் அதனை நான் நிறைவேற்றுவேன்" என உறுதிமொழி அளித்திருக்கின்றார் ரஜினிகாந்த்.

Advertisement

Advertisement

Advertisement