• Apr 25 2024

வாரிசு பட இயக்குநர் வம்சியின் அழகிய குடும்பத்தைப் பார்த்துள்ளீர்களா?- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர் விஜய் மற்றும்  இயக்குநர் வம்சி கூட்டணியில் உருவான திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளதோடு தமன் இசையமைத்துள்ளார். இவர்களோடு  சரத்குமார், ஷ்யாம், பிரகாஷ் ராஜ், பிரபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 


குடும்ப செண்டிமெண்ட் கதையம்சம் கொண்ட படமாக இப்படம் உருவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாகவே உள்ளது.அதற்க்கு ஏற்றாற்போல் இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் என இயக்குநர் வம்சி கூறி வருகிறார்.


இந்நிலையில், இயக்குநர் வம்சி தனது மனைவி மாலினி மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றார்கள் என்பதும் முக்கியமாகும்.


மேலும் வம்சி வாரிசு தவிர தெலுங்கில் முன்னணி நடிகர்களான ராம் சரண், அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, கார்த்தி, நாகார்ஜூனா என பல நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை இயக்கியுள்ளார்.தமிழில் வாரிசு திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement