• Feb 02 2023

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணியின் ப்ரொப்போஸ் போட்டோக்களைப் பார்த்திருக்கின்றீர்களா?- கியூட்டான கிளிக்ஸ்

Listen News!
stella / 1 month ago
image

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் ஆதி. இவர் இது தவிர தெலுங்கு மொழியிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.

 அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. அதே போல கடைசியாக இவர் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.


மேலும் இவரைப் போல நடிகை  நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். பின்னர், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகத நாணயம், சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.


நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர். இதனையடுத்து, இருவரும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்தனர். அதன்படி, கடந்த மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயம் ஆனது. 


அதைத் தொடர்ந்து, நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் கடந்த மே மாதம் (19.05.2022) கோலாகலமாக நடைபெற்றது. சில மாதங்களுக்கு முன் தம்பதியர் தங்களது திருமணத்தின் 100வது நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கொண்டாடினர். 


இந்நிலையில், நடிகர் ஆதி நிக்கி கல்ராணிக்கு ப்ரொப்போஸ் செய்த தருணம் மற்றும் இருவரும் டூர் சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட UNSEEN புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement