• Apr 01 2023

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி சிறுவயதில் வாழ்ந்த வீட்டைப் பார்த்திருக்கின்றீர்களா?- ட்ரெண்டாகும் வீடியோ

stella / 3 weeks ago

Advertisement

Listen News!


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நாட்டுப்புற பாடகர்களான செந்தில் மற்றும் ராஜலட்சுமி. இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்களை அதிகமாக பாடி ரசிகர்களை இவர்கள் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சி கொடுத்த புகழையடுத்து சினிமாவில் பாடும் வாய்ப்புகளையும் பெற்று வருகின்றனர். 

பிரபுதேவாவின் சார்லி சாப்லின் 2 படத்தின் சின்ன மச்சான் செவத்த மச்சான் பாடலை இருவரும் இணைந்து பாடினர்.தொடர்ந்து புஷ்பா படத்தில் வாய்யா சாமி என்ற பாடலை ராஜலட்சுமி பாடியிருந்தார். இந்தப் பாடல் இவரை மேலும் பட்டிதொட்டியெல்லாம் புகழடைய செய்துள்ளது. 


தொடர்ந்து சினிமாவில் மட்டுமில்லாமல் பல்வேறு இசைக் கச்சேரிகளிலும் இருவரும் பாடி வருகின்றனர். வெளிநாட்டு கச்சேரிகளிலும் பாடி வருகின்றனர்.இந்நிலையில் சமூக வலைதளங்களிலும் இருவரும் பிசியாக பல்வேறு பதிவுகளை போட்டு வருகின்றனர்.

அந்த வகையில் ராஜலட்சுமி தான் சிறுவயதில் வாழ்ந்த வீட்டின் வீடியோவைப் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement