• Apr 25 2024

காமெடி நடிகர் தாமுவின் மகள்களை பார்த்திருக்கின்றீர்களா...? இதோ யாரென்று பாருங்க..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இவருக்கான அறிமுகத்தைக் கொடுத்த படம் என்றால் அது 'வானமே எல்லை' என்ற படமே. தனது அறிமுக காலத்திலிருந்து இன்றுவரை ஏறத்தாள 100 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.


இவர் தொடர்பான இன்னொரு பெருமை படக்கூடிய விடயம் என்னவெனில் இவர் மறைந்த ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களுடன் உதவியாளராகப் பணியாற்றி இருக்கின்றார்.

மேலும் இயக்குநர் சிகரம் பாலசந்தரின் சீடரான இவருக்கு சினிமாவை தாண்டிய இன்னொரு சிறந்த முகமும் இருக்கிறது. அது வேறு எதுவுமில்லை. கல்விச் சேவையாளர் என்கிற புதிய முகம் தான்.

அதாவது கல்வித்துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக, தொடர்ந்து நடிகர் தாமு மேற்கொண்ட முயற்சிகளினைப் பாராட்டி தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் "ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021" என்ற தேசிய கல்வியாளருக்கான கௌரவ விருது இவருக்கு அளித்துள்ளது.


திரைப்படங்களில் பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ள தாமு தன் கவனத்தை சினிமாவில் மட்டும் காண்பிக்காமல் நடிகர் விவேக் போன்று பல சமூக சேவைகளை செய்து கொடுத்து வருகின்றார்.

எனினும் இவர் நடித்த படங்களில் நமக்கு முதலில் ஞாபகத்துக்கு வருவது என்றால் 'கில்லி' படம் தான். இதில் இவரது நகைச்சுவைகளை இன்றும் நம்மால் மறக்க முடியாது. 


இவ்வாறாக பல ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகர் தாமுவின் குடும்பப் புகைப்படம் ஒன்று வெளியாகி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


தாமுவின் மகளை பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அவரின் மகள்களை பெரிதாக யாருக்கும் தெரியாது. இதோ பாருங்கள் எவ்வளவு பெரிதாக வளர்ந்து விட்டார்கள் என்று...!


Advertisement

Advertisement

Advertisement