• Apr 20 2024

ரஞ்சிதமே பாடலின் இசையமைப்பாளர் தமனின் அப்பாவை பார்த்திருக்கிறீகளா... அவர் யார் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்யின் நடிப்பில் தற்போது பிரமாண்டமாக உருவாக்கி வரும் படம் 'வாரிசு'. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். அத்தோடு வம்சி இயக்குகின்ற இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

தென்னிந்திய திரையுலகில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் இந்த தமன். இவர் சங்கர் இயக்கிய 'பாய்ஸ்' என்ற படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் கூட நடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


இவருடைய இசையில் உருவான 'ரஞ்சிதமே' பாடல் அண்மையில் வெளிவந்து Youtubeல் தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வெற்றியை நிலை நாட்டி வருகிறது.

அத்தோடு விஜய்யின் வாரிசு படம் மட்டுமின்றி மகேஷ் பாபுவின் அடுத்த படத்திற்கும், RC15 திரைப்படத்திற்கும் தமன் தான் பிரமாண்டமாக இசையமைத்து வருகிறார்.


இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் தன்னுடைய தந்தை சிவா குமாருடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..


Advertisement

Advertisement

Advertisement