• Apr 18 2024

சமுத்திரக்கனியின் மனைவி, மகளை பார்த்துள்ளீர்களா..வெளியானது லேட்டஸ்ட் புகைப்படம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் இயக்குநராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் வெளிவந்த நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது.

அத்தோடு பல படங்களில் பிஸியாக நடித்து வரும் சமுத்திரக்கனி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் துணிவு திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனினும் அதே போல் அடுத்ததாக தனுஷின் வாத்தி படம் வெளியாகவுள்ளது.

சமுத்திரக்கனியின் மகனை பலருக்கும் பார்த்திருப்பீர்கள். சமீபத்தில் கூட அவருடைய புகைப்படம் வெளிவந்தது. ஆனால், சமுத்திரக்கனியின் மனைவி மற்றும் மகளை பலரும் பார்த்திருக்க முடியாது.

அத்தோடு இன்று தனது குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியுள்ளார். எனினும் அப்போது தனது மனைவி, மகள் மற்றும் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் சமுத்திரக்கனி.

இதோ அந்த புகைப்படம்..





Advertisement

Advertisement

Advertisement