• Apr 20 2024

ரொமான்டிக் நடிகர் ஷாஃமின் மனைவியைப் பார்த்திருக்கின்றீர்களா?- ரொம்ப கியூட்டான ஜோடி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் ஷாஃம். விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தொடர்ந்து 12பி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்திருந்தார். இதனை அடுத்து பாலா ,அன்பே அன்பே, லேசா லேசா, ஒரு மெல்லிய கோடு என பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து வந்த இவர் படவாய்ப்புக்கள் குறைந்ததால் கெஸ்ட் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். அதன்படி விஜய் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார். சிறந்த நடிகராக இருந்தாலும் இவருக்கென்று தனி அங்கீகாரம் கிடைக்கவில்லை.


விஜய்யின் வாரிசு திரைப்படத்தில் கூட  அவரது கதாபாத்திரம் குறித்து எந்த தகவலும் இல்லை.நடிகர் ஷாஃம் அண்மையில் தனது மனைவியுடன் நடன இயக்குநரும், நடிகையுமான சங்கீதா க்ரிஷ் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார். அப்போது அவர்களுடன் இணைந்து நடிகை சுஜா வருணி புகைப்படம் எடுக்க அதை தனது இன்ஸ்டாவிலும் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட இவர் தான் ஷாஃம் மனைவியா நல்ல ஜோடி என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement