2008 ஆம் ஆண்டு “அட்டா சும்மா” என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார் நேச்சுரல் ஸ்டார் நானி. இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக வலம் வருவதோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் காணப்படுகின்றது.
நடிகர் நானி தமிழில் ‘நான் ஈ’ படம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். அவரின் நிஜ பெயர் நவீன் பாபு காண்ட. படத்திற்காக அவர் நானி என்று மாற்றிக கொண்டார்.
மேலும் இவரது பூர்வீகம் ஐதராபாத். இவர் தமிழ் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து பட்டையை கிளப்பி வருகின்றார். இவர் டைரக்டர் சிரீனு வைட்லவி மற்றும் பாபு ஆகியோருடன் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.
இதன் பின்னர் ஐதராபாத் ரேடியாவில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதுவரை 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இவ்வாறுஇருக்கையில் நானிக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிய நிலையில் இன்று அவர்கள் தமது திருமண நாளை கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு....
Listen News!