• Dec 01 2022

என் பொண்டாட்டியை பெத்த மகராசா...சித்துவின் மாமனாரை பார்த்துள்ளீர்களா..? வெளியான புகைப்படங்கள்..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து, இன்று ரியல் ஜோடியாக வலம் வருபவர்கள் சித்து - ஸ்ரேயா. இவர்கள் இருவரும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான திருமணம் என்னும் சீரியலில் ஒன்றாக நடித்ததன் மூலம் இருவருக்கும் இருந்த கெமிஸ்ட்ரி, ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

இதனால் இருவரும் இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த ஆண்டு தீரமண பந்தத்தில் இணைந்தனர்.தற்போது, சித்து விஜய் டிவியில் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஸ்ரேயா, ஜீ தமிழ் டிவியில் ரஜினி சீரியலில் நடிக்கிறார்.

ஸ்ரேயா அஞ்சன் ஏற்கெனவே அன்புடன் குஷி, அரண்மனை, நந்தினி உள்ளிட்ட சீரியல்களில் தனது நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தார். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர்கள், தங்களைப் பற்றிய அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள். 

அத்தோடு யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள்.சித்து, கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் ஸ்ரேயாவை பின்தொடர்கின்றனர்.சமீபத்தில் கூட MG காரின் டாப் மாடலை சித்து சுமார் 23 லட்சம் ரூபாய்க்கு வாங்கியிருந்தார். அதுமட்டுமில்லை சித்து பிறந்த நாளை மாலைதீவில் கொண்டாட வைத்தார் ஸ்ரேயா. 

இவ்வாறுஇருக்கையில் சீரியல் நடிகர் சித்து தனனுடைய மனைவி மற்றும் அவரது மாமாவான அதாவது ஸ்ரேயாவின் தந்தையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு என் பொண்டாட்டியை பெத்த மகராசா நீங்க நல்லா இருக்கனும் எனக் கூறி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்....