• Mar 27 2023

குக்வித் கோமாளி மணிமேகலையின் தம்பியைப் பார்த்திருக்கின்றீர்களா?- யாருடன் நிற்கிறார் என்று பாருங்க

stella / 1 week ago

Advertisement

Listen News!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக அறிமுகமாகியவர் தான் மணிமேகலை. தொடர்ந்து பல நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த இவர் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணத்தில் ஈடுபட்டதால் சிலகாலம் சின்னத்திரையை விட்டு விலகியிருந்தார்.

பின்னர் விஜய் டிவி நிகழ்ச்சிகள் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தாலும் இவருக்கு நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது குக்வித்கோமாளி நிகழ்ச்சியே ஆகும். மூன்று சீசன்களாக கலக்கி வந்த இவர் இந்த சீசனில் இருந்து அண்மையில் விலகினார்.


இவர் இந்நிகழ்ச்சியை விட்டு விலகியதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும், திரைப்படங்களில் நடிக்கிறார் என்றும் விஜய் டிவி தரப்பினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகி விலகியதாகவும் கூறப்பட்டது.


ஆனால் அவை அனைத்தும் இல்லை என்றும் அவர் எதிர்காலம் கருதி இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் செஃப் தாமு அண்மையில் தெரிவித்திருந்தார். இப்படியான நிலையில் மணிமேகலை தனது தம்பி மற்றும் கணவர் இருவரும் ஒன்றாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement